இலங்கையில் நடாத்தப்படுகின்ற பரீட்சைகள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கான விசேட ஏற்பாடொன்றை கடந்த மாதம் (ஜனவரி) 25ஆம் திகதி முதல் பரீட்சைகள் திணைக்களம் ஆரம்பித்துள்ளதாக திணைக்களத்தின் ஆணையாளர் நாயம் W.M.N.J.புஷ்பகுமார தெரிவித்துள்ளார். அதற்கமைய தேவையான தகவல்களைப் பெற்றுக்கொள்ள 1911 என்ற துரித தொலைபேசி இலக்கத்தினூடாகவோ அல்லது 011-2177771 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாகவோ அழைப்பை ஏற்படுத்த முடியும் என்றும் 011-2177411, 011-2785220 என்ற பெஃக்ஸ் இலக்கங்களுடாகவும் பொதுமக்களுக்குத் தேவையான தகவல்களைப் பெற்றுக்கொள் முடியும் எனவும் அறிவித்தார்.
16 February 2012
இ/கையில் நீரில் மூழ்கி மரணிக்கும் வீதம் அதிகம்
நீரில் மூழ்குவதால் மாத்திரம் இலங்கையில் வருடாந்தம் சுமார் 1,500 இற்கும் 1,600 இற்கும் இடைப்பட்ட எண்ணிக்கையிலானவர்கள் இறப்பதாக இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.நீரில் மூழ்குவதால் ஏற்படும் மரணங்களைத் தவிர்ப்பதற்காக விசேட வேலைத்திட்டங்களை இவ்வருடம் மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
உங்கள் கருத்து:
Labels:
திடீர் NEWS
15 February 2012
facebook இற்கு சவாலாக Millatfacebook
உலகமுஸ்லிம்கள் அனைவரும் தமது பேஸ்புக் பயனர் கணக்குகளை அழித்து அதற்கு பதிலாக மில்லத்பேஸ்புக்கை பயன்படுத்தி இஸ்லாத்துக்கு உறுதியையும் இருதி நபி(ஸல்) அவர்களின் கௌரவத்துக்கு பாதுகாப்பாகவும் இருக்குமாறு உலக முஸ்லிம்களிடம் உமர் ஸகீர் மீர் கேட்டுக்கொண்டார். 2010ஆம் ஆண்டு பாகிஸ்தானில் பேஸ்புக் தற்காலிமாக தடை செய்யப்பட்டு இரண்டு நாட்களில் மில்லத்பேஸ்புக் ஆரம்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மில்லத்பேஸ்புக் திறக்கப்பட்டு பத்து நாட்களில் 3இலட்சம் கணக்குகள் பதிவுசெய்யப்பட்டது. தற்போது மில்லத்பேஸ்புக் ஐந்து இலட்சம் பாவனையாளர்களை கொண்டு இயங்குகிறது.
உங்கள் கருத்து:
Labels:
இணையம்
14 February 2012
The Island திரைப்படம் பற்றி
The Island அருமையானதொரு விஞ்ஞனத் திரைப்படம். படம் ஆரம்பிக்கும்போதே அழகான கடல் வழியாக அழகானதொரு தீவொன்றை நோக்கி வீடியோ நகர்கின்றது. திடீரென பல்வேறு கட்டம் கட்டமான காட்சிகளின் பின்னர் படத்தின் கதாநாயகன் உறக்கத்திலிருந்து பதட்டத்துடன் விழிக்கின்றான். அதிலிருந்து படம் ஆரம்பிக்கின்றது. ஒரு பாலைவனத்தின் நடுவில் நிலத்தின் கீழ் பாரியதொரு விஞ்ஞான ஆய்வுகூடம். நூற்றுக் கணக்கான மனிதர்கள் ஒரே வித யுனிபோம் வழங்கப்பட்டு இன்னும் சிலரால் கவனிக்கப்பட்டு பராமறிக்கப்பட்டு வருகிறார்கள். உயர்ந்த தொழிநுட்பத்தில் அவ் ஆய்வுகூடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அங்கு பராமறிப்புக்குட்பட்டு வரும் யாருக்கும் நாம் எங்கு இருக்கின்றோம் நாம் இங்கு என்ன செய்கின்றோம் என்றெல்லாம் ஒன்றும் தெரியாது. இதுபற்றி ஒருசிலர் யோசித்து கேள்விகளைக் கேட்டுக்கொண்டாலும் ”வேண்டாத வேளை” என்றுவிட்டு மீண்டும் தமது வேளையைப் பார்ப்பார்கள்.
உங்கள் கருத்து:
Labels:
திரை விமர்சனம்
13 February 2012
சூரியன் மேற்கில் உதிக்கும் நாள் உலகம் அழியும்
மணிக்கு 90Km வேகத்தில் பிரயாணித்துக்கொண்டிருக்கும் ஒரு பேருந்து ஒரேயடியாக நிறுத்தப்பட்டு மீண்டும் அதேவேகத்தில் பின்னோக்கிச் சென்றால் அதனுள் இருக்கும் பிரயாணிகளின் நிலை என்னவாக இருக்கும். இதேபோன்றுதான் இப்பூமியும் தற்போது சுழலும் அதுவேகத்தில் மேற்கு கிழக்காகச் சுழன்றாலும். இதனால் பூமியின் தட்டுகள் குழுங்கி, மலைகள் இடம்பெயர்ந்து, பூகம்பங்கள் தோன்றி பலத்த சேதங்கள்தான் விளையும்.
உங்கள் கருத்து:
Subscribe to:
Posts (Atom)










