الرجال قوامون على النساء
ஆண்கள் பெண்களை நிர்வகிப்பவர்களே! (அல்குர்ஆன் – 4:34)
இந்த அல்குர்ஆன் வசனத்திற்கான நடைமுறை ரீதியானதொரு விளக்கம். “ஒரு ஆண் பத்து பெண்களுடன் வீடு கூடினால் அவன் பத்து பிள்ளைகளைப் பெற்றெடுப்பான். ஆனால் ஒரு பெண் பத்து ஆண்களுடன் வீடு கூடினாலும் ஒரு பிள்ளையைத்தான் பெற்றெடுப்பாள்.” இறைவனின் நியதி, அதுதான் இயற்கையின் விதி. ஒவ்வொன்றையும் அல்லாஹ் அதனதன் இயல்புகளில் மிகப் பொருத்தமாகப் படைத்துள்ளான். அவனுக்கே புகழனைத்தும். அல்ஹம்து லில்லாஹ்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
உங்கள் கருத்து:
குறிப்பு : இன்று ஆக்கங்களைப் படைப் பவர்களைவிட அவற்றைப் படிப்பவர்கள்தாம் அதிகம். இதுவரையில் ஒரு கட்டுரையேனும் எழுதாதவர்கள் இருக்கின்றனர். ஆனால் அவர்களுக்குள்ளும் ஏதாவதொன்று எழுதவேண்டுமே என்ற ஆசையும் ஆர்வமும் இருப்பதை மறுக்கமுடியாது. ஆசை, ஆர்வம் இருந்தாலும் எப்படி எழுதுவது? எதை எழுதுவது? எங்கிருந்து ஆரம்பிப்பது? எங்குபோய் முடிப்பது? போன்ற விடயங்களை அவா்கள் அறியாமலிப்பதனால்தான் எழுதுவதற்குக் கைவைக்காமலிருக்கின்றார்கள். நீங்கள் படிக்கப்போகும் இக்கட்டுரை இன்ஷா அல்லாஹ் உங்களது எழுத்தாற்றலுக்கான அடித்தளத்தை இட்டுத்தரும் என்று நான் நம்புகின்றேன். நான் எழுதிய இவ்வாக்கம் “அகவிழி” என்ற சஞ்சிகையில் ஆண்டு பிரசுரமானது. தொடர்ந்து வாசியுங்கள்...
ஆலிப் அலி (இஸ்லாஹி)
உங்கள் கருத்து:
அரபு நாடுகளில் ஏற்பட்டுவந்த கொந்தளிப்பு நிலை மேற்கு நாடுகளிலும் சாடை மாடையாக நிகழ்ந்து வந்ததை நாம் கேள்வியுற்றோம். அதன் தொடராக கடந்த சில தினங்களுக்கு முன்பு இஸ்ரேலிலும் மக்கள் தெருவில்; இறங்கி இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடாத்தினர். ஆதிகமாக இளைஞர்களால் முன்னின்று நடாத்தப்பட்ட இப்பாரிய ஆர்ப்பாட்டத்தில் சுமார் 60,000 இற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டுள்ளனர். இவ்வார்ப் பாட்டத்திற்கான அழைப்பு பேஸ்புக், டுவிட்டர் போன்ற முகநூல்கள் வாயிலாகவும் விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
உங்கள் கருத்து:
பிரபஞ்சம் என்பது நாம் வாழும் பூமி உட்பட பூமிக்கு வெளியில் இருக்கும் சந்திரன், சூரியன், நட்சத்திரங்கள், வாயுக்கள், ஏனைய கோள்கள், பால்வீதிகள் போன்ற அனைத்தையும் உள்ளடக்கி இருப்பதாகும். இதன் பிரமாண்டத்தை விளக்குவதாயின் பிரபஞ்சம் 300million இற்கும் அதிகமான Galaxies எனும் பால்வீதிகளைக் கொண்டுள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. இப்பால்வீதிகள் 250billion இற்கும் அதிகமான நட்சத்திரங்களைக் கொண்டுள்ளன. அதாவது பூமியில் உள்ள அனைத்துக் கடல் மணற்துணிக்கைகளையும் விட பிரபஞ்சததிலுள்ள நட்சத்திரங்களின் எண்ணிக்கை அதிகமாகும். சூரியன் இந்த மணற்துணிக்கைகளில் ஒன்று மாத்திரமே. எவ்வளவு தூரம் மைல்கணக்கில் சென்றாலும் பிரபஞ்சத்தின் எல்லையை அடையவே முடியாது. இத்தரவுகள் மூலம் பிரபஞ்சம் என்பது எவ்வளவு விசாலமானதும், பிரமாண்டமானதும் என்பதை எம்மால் புறிந்து கொள்ள முடியும்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
உங்கள் கருத்து:
ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச ஒலிம்பிக் ஒன்றியம் போன்ற சர்வதேச ரீதியில் 72 அமைப்புக்களின் இணைய தளங்களில் கடந்த ஐந்து வருடங்களாக இடம்பெற்று வரும் மிகப் பெரிய இணைய தளத் திருட்டு குறித்து பிரபல கணனி பாதுகாப்பு நிறுவனமான மெகாபீ (MacAfee) தகவல் வெளியிட்டுள்ளது. அத்தோடு கடந்த சில ஆண்டுகளாக சர்வதேச அளவில் இராணுவம் மற்றும் உள்துறை தொடர்பான இணையத்தளங்களில் துருவிகள் (Hackers) உட்புகுந்து சர்வசாதாரணமாக இரகசிய தகவல்களைத் திருடும் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
உங்கள் கருத்து: