உலக வரலாற்றை நோட்டமிட்டால் ஓர் உண்மை புரியும். பலஸ்தீனம் யார் கையில் செல்கிறதோ உலகம் அவர்கள் கைவசமாகும். அந்த குறிக்கோலுக்காகத்தான் கிறிஸ்துக்கு முன்பிருந்தே பலஸ்தீனைத் தம் வசப்படுத்த பல சக்திகள் படையெடுத்துள்ளன. பாபிலோனியர்கள், பாரஸீகர்கள், ரோமர்கள், யூதர்கள், கிறிஸ்தவ சிலுவை யுத்தம், ஆங்கிளேயப் படையெடுப்பு, பிரித்தானிய காலணித்துவம், மீண்டும் அமெரிக்க, ஐரோப்பிய கூட்டுச் சக்திகளின் இஸ்ரேல் என்ற உருவாக்கம். இவை அனைத்தும் பலஸ்தீனை மையப்படுத்தி அமைந்ததற்கு இது ஒரு காரணம். பலஸ்தீன் அது அருள்பாளிக்கப்பட்ட பூமி. மட்டுமல்ல அருள்பாளிக்கப்பட்ட போராளிகளைக்கொண்ட பூமியும்கூட. உலகில் எங்கு சென்றாலும் எதையும் பெற்றுக்கொள்ளலாம். ஆனால் ஷஹாதத் என்ற அருளை அங்குதான் இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...