கற்குகைக்குள் பதுங்கியிருந்துகொண்டு இறைகளைத் தாக்கும்
விலங்கு போன்று பற்குகைக்குள் பதுங்கிக் கிடந்து பல்வேறு செயல்களைப் புரியும் நாவின் சில அற்புதத் தன்மைகளைப்
பற்றி இத்தொடரில் நோக்குவோம். எமது நாக்கு இளஞ்சிவப்பு நிறத்தினாலான எழும்புகளற்ற ஒரு தசையாகும். அத்தோடு உடலில் உள்ள வலிமையான தசைகளில் நாக்கும் ஒன்று. நாவின் வெளியே தெரியும் பகுதி அகலம் குறைந்த்தாகவும் மெல்லியதாகவும்
நாவின் உற்பகுதி அகலமாகவும் தடிப்பாகவும் காணப்படுகின்றது. எழும்பில்லாத தசைத் துண்டு
என்பதால் எப்படி வேண்டுமானாலும் வளைந்து, நெழியும் தன்மையைக்
கொண்டுள்ளது. அத்தோடு நாக்கின் நுணிப் பகுதி உடம்பிலேயே
தொடுகை உணர்ச்சி கூடிய பகுதியாகும். வாயில் ஊறும் உமிழ் நீர் நாவை எப்போதும் ஈரமாக வைத்திருக்கின்றது.
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...