”மாயன் நாட்காட்டியின் காலம் முடிவடையப் போகின்றது, சூரிய மண்டலத்திலுள்ள கிரகங்கள் அனைத்தும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கப்போகின்றன. இதனால் தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு சூரிய வெளிச்சமின்றி பூமி இருளில் மூழ்கியிருக்கும். “நிபிரு” என்ற கிரகம் பூமியுடன் மோத உள்ளது. இதன் மோதலால் பூமி சிதைவடையும்” என்றெல்லாம் பல்வேறு விடயங்களைக் கூறி உலக அழிவு நிகழப்போகின்றது என தற்போது பரவலாகப் பேசப்படுவதை அனைவரும் அறிந்திருப்பீர்கள். இவ்வாறு பேசுபொருளாக மாறியிருக்கும் உலக அழிவு நடக்கப்போவது இன்னும் பத்து, இருவது வருடங்களுக்குப் பிறகல்ல. மாறாக 2012 டிசம்பர் (இம்மாதம்) 21 ஆம் திகதியில்தான் இச்சம்பவங்கள் நடக்கப்போகின்றன என்று பல்வேறு பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...