"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

06 February 2010

மகாகவி அல்லாமா இக்பால்

எழுங்கள், கிழக்கின் அடிவானில் இருள் கப்பிக்கொண்டுள்ளது. நம் நெருப்பெழும் குரலால் (தூங்கும்) அவையில் விளக்கேற்றுவோம்

2009 / பெப்ரவரி
படிகள் சஞ்சிகையில் பிரசுரமானது
...ஆலிப் அலி...

இஸ்லாத்தின் இரண்டாம் மீளெழுச்சியின் முன்னோடிகளில் முதன்மையானவராகக் கருதப்படுபவர்தாம் கலாநிதி அல்லாமா இக்பால் அவர்கள். இஸ்லாத்தின் ஓரிறைக்கொள்கை பலமிழந்து அல்குர்ஆனினதும் நபியினதும் போதனைகளிலிருந்தும் தூரப்பட்டு முஸ்லிம் சமூகம் தள்ளாடிக்கொண்டிருக்கும் போதுதான் இக்பால் எனும் மகா விருட்சம் தளிர்த்தெழலானது.

இக்பால் உலகம் போற்றும் சர்வதேசக் கவிஞர். தூங்கிக் கிடந்த மனித உள்ளங்களையும் உணர்வுகளையும் தட்டி எழுப்பி பேனா முனையில் செயலூக்கம் கொடுத்த அவரின் படைப்புகள் காலாத்தால் அழியாதவை. மனிதத்தின் நோக்கம் அறியாதிருந்த சமூகத்தை ஓர் இலட்சியவாத சமூகமாகக் கட்டமைக்க அரும்பாடுபட்டவர்தான் கவிஞர் அல்லாமா இக்பால்.

(முன்னைய இந்தியாவில்) தற்போதைய பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தின் ஸியால்கோட் நகரில் 1877ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 09ஆம் திகதி இக்பால் இப்பூவுலகின் தென்றல் காற்றைச் சுவாசிக்கலானார். சிறுபராயத்திலேயே அல்குர்ஆனையும் இஸ்லாமியப் போதனைகளையும் அரபு மற்றும் பாரசீகம் போன்ற மொழிகளையும் கற்றுக்கொண்டார்.கவிஞன் என்பான் பிறப்பவன், உண்டாக்கப்படுபவனல்லன்என்ற கூற்றை முழுமையாக நிரூபித்துக்காட்டினார். இக்பால் பள்ளிப்பருவத்திலேயே கவி புனைவதிலும் கவி பாடுவதிலும் அதிக திறமைகாட்டினார். குறுகிய காலத்திலேயே அவரது மொழிப்புலமையையும் சொல் வீச்சையும் கண்ட பிரபல கவிஞர் மிர்சா தாக் இக்பாலின் கவிதைகள் திருத்தத்தையோ, மீள் பரிசீலனையையோ வேண்டாதவைஎன்றார்.
ஆலிப் அலி.

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...