ஊடகங்களின் தனிநிகர் வடிவம் தொலைக்காட்சி என்பது இலங்கைவாழ் மக்களில் பெரும்பாலானோரின் கருதலாகும். இன்று இலங்கையில் மாத்திரம் ஏகப்பட்ட தொலைக்காட்சி அலைவரிசைகள் இயங்கிவருகின்றன. அலைவரிசைகளில் கூடுதலாக இடம்பிடித்திருப்பவை விளம்பரங்களாகும். விளம்பரங்களில் அதிகமானவை பெண்களைக் காட்சிப்படுத்தியே கட்டமைக்கப்படுகின்றன என்பதை ஒருக்காலும் மறுதலிக்க முடியாது. அந்தவகையில் தொலைக்காட்சி விளம்பரங்களில் பெண்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறார்கள் என்றும், அவ்விளம்பரங்களைப் பார்ப்பவர்களின் மனோபாவத்தில் அவை எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்றும் ஓர் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
தொலைக்காட்சி அலைவரிசைகள் விளம்பரத்திற்கு கூடுதல் முன்னுரிமையளிக்கின்றன. விளம்பரம் உற்பத்தியாளர்களின் சந்தைப்படுத்தலுக்கான ஓர் ஊடகமாகவும் அலைவரிசை நிறுவனங்களுக்கான சம்பாத்தியமாகவும் விளங்குகிறது. ஒரு நிகழ்ச்சியினிடையே எத்தனை விளம்பரங்கள் காட்டப்படுகின்றன எனக் கணக்கிட்டால் அதற்கு வழங்கப்படும் முக்கியத்துவத்தை விளங்கலாம்.
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...