"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

12 January 2010

துருக்கி வீரன் முஹம்மத் அல்பாதிஹ்

அம்ரிப்னு ஆஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ஒரு முறை நாம் நபி(ஸல்) அவர்களைச் சூழ அமர்ந்திருந்தோம். அப்போது அண்ணலாரிடம்“கொன்ஸ்தாந்து நோபிள், ரோம் இவற்றில் எது முதலில் வெற்றிகொள்ளப்படும்?” என வினவப்பட்டது. அதற்கவர் “ஹிரகல் மன்னனின் நகரம் - கொன்ஸ்தாந்து நோபிள் - தான் முதலில் வெற்றிகொள்ளப்படும் என்றார்கள்.”
(ஆதாரம் - முஸ்னத் அஹ்மத் :6645)

கொன்ஸ்தாந்து நோபிள் என்பது துருக்கியின் தற்போதைய பெரிய நகரங்களில் ஒன்றான இஸ்தான்பூலாகும். இது அரபு மொழியில் குஸ்தன்தீனியா என்றழைக்கப்படுகிறது. அன்று நபியவர்காலத்து பெரும் வல்லரசான ரோம் சாம்ராஜ்யம் இரண்டு கிளைகளைக் கொண்டு காணப்பட்டது. ஒன்று, ரோமைத் தலைநகராகக்கொண்ட மேற்கு ராஜ்யம். மற்றையது, கொன்ஸ்தாந்து நோபிளைத் தலைநகராகக்கொண்ட கிழக்கு ராஜ்யம். அக்கிழக்கு ராஜ்யம்தான் பைஸாந்தியப் பேரரசு எனப்பட்டது. பெரும் வல்லரசாகத் திகழ்ந்த இந்நகரம் ஒரு நாள் முஸ்லிம்களால் வெற்றிகொள்ளப்படுமென நபியவர்கள் எதிர்வுகூறியதே மேற்கண்ட நபிமொழி. இதுபற்றி மற்றுமொருமுறை நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள். 
கொன்ஸ்தாந்து நோபிள் ஒரு வீரனால் வெற்றிகொள்ளப்படும். அத் தளபதிதான் சிறந்த தளபதி. அந்த சேனைதான் சிறந்த சேனை என்றார்கள். (முஸ்னத் அஹ்மத்) 
ஆலிப் அலி (இஸ்லாஹியா வளாகம்)

உங்கள் கருத்து:

27 November 2009

உலகை உலுக்கி வரும் பட்டினிச்சாவு

“பட்டினிச்சாவு” இன்றைய பெரும் பிரச்சினையாக காட்டுத்தீபோல் உலகம் பூராவும் பரவிவருகின்றது. யுத்தமென்றும், ஆட்கொல்லிநோய்களென்றும் பல்வகை சவால்களையும் எதிர்கொண்டு வரும் மனிதன் இன்றைய தினம் பெரும் உணவுப்பஞ்சத்திற்கும் முகம்கொடுக்க நேர்ந்துள்ளான். இன்று பல்வேறு உலக நாடுகள் இப்பிரச்சினையில் சிக்கி வெளியேற முடியாது தவித்துக்கொண்டிருக்கின்றன. இதனால் பல்வேறு உயிரிழப்புக்களும், கோளாருகளும் தினந்தோரும் ஆங்காங்கு நிகழ்ந்தவண்ணமிருக்கின்றன. உலகத்தரவுகளை வைத்து நோக்கும் போது இந்தப்பட்டினிச்சாவு அநியாயமானது. தமது சுயத்தின் மீது பேராசை கொண்ட சிறு தொகை மக்கள் கூடுதல் இலாபமீட்டவும் தம் நலன் காக்கவுமாக பெருந்தொகை மக்களின் அத்தியாவசியத் தேவைகளில் இடையூறுகளை ஏற்படுத்தி சுகபோகத்தில் திலைத்துக் கொண்டிருக்கின்றனர். அண்மைக் காலங்களில் இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கைகள் இதனை அம்பலப்படுத்தியுள்ளன.

பல நாடுகள் எதிர்கொண்டு வரும் உணவுப்பற்றாக்குறை, கிடைக்கும் கொஞ்ச உணவிலும் ஊட்டச்சத்துக்குறைபாடு, அதனாலான நோய்கள் என்பவற்றின் காரணமாக நாளொன்றுக்கு 16000 குழந்தைகள் இறக்கநேரிடுகின்றன.

எங்கள் தேசம் பத்திரிகையில் பிரசுரமாகியது
ஆலிப் அலி (இஸ்லாஹி)

13 November 2009

தொலைக்காட்சி விளம்பரங்களில் பெண்கள் - ஒரு நோக்கு.

ஊடகங்களின் தனிநிகர் வடிவம் தொலைக்காட்சி என்பது இலங்கைவாழ் மக்களில் பெரும்பாலானோரின் கருதலாகும். இன்று இலங்கையில் மாத்திரம் ஏகப்பட்ட தொலைக்காட்சி அலைவரிசைகள் இயங்கிவருகின்றன. அலைவரிசைகளில் கூடுதலாக இடம்பிடித்திருப்பவை விளம்பரங்களாகும். விளம்பரங்களில் அதிகமானவை பெண்களைக் காட்சிப்படுத்தியே கட்டமைக்கப்படுகின்றன என்பதை ஒருக்காலும் மறுதலிக்க முடியாது. அந்தவகையில் தொலைக்காட்சி விளம்பரங்களில் பெண்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறார்கள் என்றும், அவ்விளம்பரங்களைப் பார்ப்பவர்களின் மனோபாவத்தில் அவை எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்றும் ஓர் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

தொலைக்காட்சி அலைவரிசைகள் விளம்பரத்திற்கு கூடுதல் முன்னுரிமையளிக்கின்றன. விளம்பரம் உற்பத்தியாளர்களின் சந்தைப்படுத்தலுக்கான ஓர் ஊடகமாகவும் அலைவரிசை நிறுவனங்களுக்கான சம்பாத்தியமாகவும் விளங்குகிறது. ஒரு நிகழ்ச்சியினிடையே எத்தனை விளம்பரங்கள் காட்டப்படுகின்றன எனக் கணக்கிட்டால் அதற்கு வழங்கப்படும் முக்கியத்துவத்தை விளங்கலாம்.

.....ஆலிப் அலி.....

26 October 2009

"கருக்கலைப்பு" சவக்காடாகி வரும் கருவறைகள்

அல்ஹஸனாத் சஞ்சிகையில் பிரசுரமாகியது.

பல்பரிமான அறிவியல் வளர்ச்சியால் இன்று மனிதன் இன்னோரன்ன துறைகளில் பல்வேறு வசதிவாய்ப்புகளைப் பெற்றுவருகிறான். சடரீதியாக மாத்திரமன்றி சிந்தனா ரீதியாகவும் ஜனநாயகம், மனித உரிமை, சமூகவிடுதலை போன்ற பல்வேறு அம்சங்களில் முதிர்ச்சியடைந்துள்ளான். எனினும் இந்த முன்னேற்றப் பாதையில் வழிகாட்டியாக இறை சட்டதிட்டங்களைக் கைக்கொள்ளாது மனித மனோ இச்சைகளை எடுத்துக்கொண்டமையால் இன்று உலகளாவிய ரீதியில் அனாச்சாரங்களும் அழிச்சாட்டியங்களும் நெருக்கடிகளும் பிரச்சினைகளும் அரங்கேறிக்கொண்டிருப்பதனைக் காணக்கூடியதாயுள்ளது.

அந்தவகையில் இன்று சர்வதேச ரீதியாக, குறிப்பாக இன்றைய நாகரீக விரும்கிகளின் கனவு தேசமாக விளங்கும் மேற்குநாடுகளில் நடைபெறும் கருக்கலைப்பு தொடர்பாகவும் கருக்கலைப்பு செய்வதற்கான காரணிகள் பற்றியும் அதன் விளைவுகள் குறித்தும் சற்று விரிவாக விளங்கிக்கொள்வோம்...

10 October 2009

“ரிப்கா பாரி” வெளிக்கொணரப்படாது மூடிமறைக்கப்படும் உண்மைகள்

“ரிப்கா பாரி” அண்மையில் பத்திரிகைகளினதும் தொலைக்காட்சி, வானொலிச் செய்தியறிவிப்புளினதும் இணையத் தளங்களினதுமாக சர்வதேச பேசுபொருளாகக் காணப்பட்ட ஒரு பெயர். நாமனைவரும் அறிந்த விடயம். இவ்வாறு இப் பதினேழு வயது யுவதி உலகளவில் பிரபலமாவதற்கு பெரிதாக ஒன்றும் சாதனைகள் செய்துவிடவில்லை. இஸ்லாத்தை விட்டு விட்டு கிறிஸ்தவ மதத்தைத் தழுவிக்கொண்டமைதான் இவ்வாறு இவர் பிரபல்யம் பெறக் காரணம். இந்த யுவதி மதம்மாறிச் சென்றதைச் சாட்டாகவைத்துக்கொண்டு ஊடகங்கள் இஸ்லாம் மிகப் பயங்கரமானதொரு கொள்கை. பெண்களுக்கு அதில் எந்த சுதந்திரமுமில்லை. அதனால்தான் மக்கள் இஸ்லாத்தைவிட்டும் விரண்டோடுகின்றார்கள் போன்ற புரளிகளை மக்கள் மத்தியில் கிளப்பிவிட்டுள்ளன.

Related Posts Plugin for WordPress, Blogger...