“முதலில் வித்திலிருந்து மரம் வந்ததா? அல்லது மரத்திலிருந்து வித்து வந்ததா?” என்று பலரும் கிண்டளாகக் கேட்பதை நீங்கள் செவியுற்றிருப்பீர்கள். உண்மையில் வித்து விருட்சமாகி, விருட்சத்தில் பூப் பூத்து, பூ காயாகி, காய் பழமாகி, பழத்திலிருந்து வித்துருவாகி, அவ்வித்து மீண்டும் விருட்சமாகி... இத்தொடர் கதைக்கு முடிவே இல்லை. இக்கதை அல்லாஹ் இப்பூவுலகைப் படைத்தது முதல் தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றது.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
உங்கள் கருத்து:
அந்தத் தெருவில் இரண்டு குதிரைகள எப்போதும் இணைந்தே வலம் வந்தன. பார்ப்பதற்கு இரண்டும் ஒன்று போல் தெரியும். நெருங்கிப் பார்த்தால் ஓர் உண்மை புரியும். இரண்டு குதிரைகளில் ஒன்றுக்குக் கண் தெரியாது. கண்தெரியாத குதிரையை அதன் உரிமையாளர் கட்டிப்போடவில்லை. இன்னொரு குதிரையுடன் மேயவிட்டார்.
ஆனால், மிக வித்தியாசமான அபூர்வமான ஒரு விடயத்தையும் அவர் செய்தார். கண்தெரியாத குதிரையின் கழுத்தில் சிறிய மணி ஒன்றைக் கட்டியிருந்தார். மணியோசை கேட்டு ஊனமுற்ற குதிரை, அடுத்ததைத் தொடர்ந்து வலம்வரும். அந்த உரிமையாளர் செய்ததைத்தான் இறைவனும் செய்கின்றான். ஒவ்வொரு குறைபாட்டுக்கும் மாற்று ஏற்பாட்டை செய்துவைத்துள்ளான். நன்றி : மீள்பார்வை.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
உங்கள் கருத்து:
குறித்ததொரு கடையில் வாடிக்கையாளர்கள் வரிசையில் பொருட்களை வாங்குவதற்காக வரிசையில் வந்துகொண்டிருந்தனர். இடையே வந்த செல்வந்தர் ஒருவர் வரிசையை உடைத்துக்கொண்டு நுழைய முயன்றார். மற்றவர்கள் அதனைத் தடுத்ததும் ஆவேசமாக “நான் யார் தெரியுமா?” என்று அதட்டிக்கேட்டார். கடை ஊழியர் பணிவாய்ப் பேசி அவரை நகர்த்த முயன்றார். மீண்டும் “நான் யார் தெரியுமா?” என்று உறுமினார். மேலாளர் வந்து வரிசையில் வரப்பணித்தும் “நான் யார் தெரியுமா?” என்று திருப்பிக் கூற…
மேலாளர் அலுவலக ஒலிபெருக்கியில் அறிவித்தார். “தான் யார் என்பது தெரியாமல் ஒரு மனிதர் எதிரே வருபவர்களிடமெல்லாம் அதுபற்றிக் கேட்கின்றார். அறிந்தவர் யாராவது இருந்தால் அவலை அடையாளம் காண உதவுங்கள்” என்றார். உண்மையில் தன்னை மறப்பதே தலைக்கனத்தின் அடையாளமாகும்.
நன்றி : மீள்பார்வை.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
உங்கள் கருத்து:
விளையாட்டுத் தொலைபேசியில் ஒரு பெண் குழந்தை தன் தோழியுடன் கற்பனையில் பேசிக் கொண்டிருந்தது. அப்போது மடியில் இருந்த பொம்மையைச் சுட்டிக்காட்டி “இவளை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்றே தெரியவில்லை? அடங்கவே மாட்டேன்குறாள், சமாளிக்கவே முடியவில்லை” என்கிறாள் குழந்தை. இதனை செவியுற்ற குழந்தையின் தாய் அதிர்ச்சியடைந்துவிட்டாள். தன் சிநேகிதியுடன் பேசிய விடயம் குழந்தையின் மனதில் இப்படியொரு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதை உணர்ந்துகொண்டாள். குழந்தைகள் பற்றிய நமது விமர்சனங்கள் அவர்களைச் சோர்வடையச் செய்கின்றன. குழந்தைகளோடு பேசும்போதும் அவர்களைப் பற்றிப் பிறரிடம் உரையாடும்போதும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.ஆலிப் அலி (இஸ்லாஹி)
உங்கள் கருத்து:
கணினிகளை ஊடுருவித் தாக்குதல் நடாத்தும் மேற்படி ஆயுதங்களை அல்லது வைரஸ்களை வடிவமைப்பவர்களைப் பொதுவாக “ஹெகர்ஸ் (Hackers) துருவிகள்” என அழைத்தாலும் அவர்களை இரண்டுவகையினாரப் பிரிக்க முடியும். அனுமதியின்றி சட்டவிரோதமாகக் கணினிகளை ஊடுருவி நாசகார வேலைகளைச் செய்வோர் கருப்புத் தொப்பிகள் (Black Hats) என அடையாளப்படுத்தப்படுகின்றனர். Crackers என்றும் இவர்கள் குறிப்பாக அழைக்கப்படுகின்றனர். கணினித் தொகுதிகளினுள் அனுமதியுடன் உட்பிரவேசித்து அவற்றிலுள்ள ஓட்டை உடைசல்களை, பிழைகளை இனங்கண்டு அவற்றின் பாதுகாப்பற்ற தன்மைகளை நீக்கி சரிசெய்பவர்கள் வெள்ளைத் தொப்பிகள் (white Hats) என்றும் அழைக்கப்படுகின்றனர். அவர்கள் சட்டபூர்வமான முறையில் அதில் ஈடுபடுவதனால் இவர்களை Ethical Hackers என்றும் அழைக்கப்படுகின்றனர்,
ஆலிப் அலி (இஸ்லாஹி)
குறிப்பு : “எங்கள் தேசம் பத்திரிகையில் பிரசுரமான ஆக்கம்”
உங்கள் கருத்து: