“When
the dream comes true” என்றொரு குறுந்திரைப்படம்.
படிப்பறிவற்ற தள்ளுவண்டித் தொழிலாளிக்கு வரிசையாகக் குழந்தைகள். அவனது மகள் பாடசாலை
செல்லவேண்டிய வயதில் கூலி வேலைக்குச் செல்ல நேரிடுகிறது. “தன் தந்தை ஒரு குழந்தையோடு
நிறுத்தியிருந்தால் குடும்பம் எவ்வளவு சந்தோசமாக இருந்திருக்கும்” என அந்தப் பத்து வயதுச்
சிறுமி சிந்திப்பதே அக்குறுந்திரைப் படம் சொல்லும் சேதி. தமிழ்நாடு திரைப்படத் துறை
மாணவர்களே இக்குறுந்திரைப் படத்தைத் தயாரித்துள்ளார்கள். இதுபோன்ற குறுந்திரைப் படங்கள், சுவரொட்டிகள், சுலோகங்கள், விளம்பரங்கள் என்பவற்றை
இன்று சமூகத்தில் பரவலாகக் கண்டுகொள்ளலாம். குடும்பக் கட்டுபாட்டுத் திட்டத்தை சமூகமயப்படுத்துவதற்காக
மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில் சிலதே இவை.
குறிப்பு : எங்கள் தேசம் பத்திரிகையில் பிரசுரமான எனது ஆக்கம்
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...