"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

11 September 2011

9/11 தாக்குதல் நடந்து இன்றுடன் 10 வருடம்...

செப்டம்பர் தாக்குதல் நடைபெற்று இன்றுடன் பத்துவருடங்களாகின்றன. அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் மீதான தாக்குதலின் பின்பு இந்த உலகின் போக்குகள் வெகுவாக மாற்றம் கண்டுள்ளன. உண்மையில் Sep/11 இன் சூத்திரதாரி உஸாமா பின் லாதின்தானா? இல்லையா? என்பது குறித்தெல்லாம் இன்னும் வாதப் பிரதி வாதங்கள் சூடுபிடித்துச் செல்கின்றன. “ Sep/11 தாக்குதலும் விரிந்துசெல்லும் அமெரிக்க போர் பட்டியலும்” என்ற எனது ஆக்கத்தை வெகு சீக்கிரத்தில் எதிர்பாருங்கள்...

ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

07 September 2011

உலகை அச்சுருத்தும் ஹெகிங் தாக்குதல்கள்

கடந்த ஜுன் மாதம் 16ம் திகதி ஈமெயில் கணக்குகளைப் பரவலாகப் பயன்படுத்தும் பலருக்கும் ஒரு அபாயகரமான நாள். அதற்குக் காரணம் “லூல்ஸெக் - LilzSec (Lulz Security)” என்ற துருவிகள் குழுமம் (Hackers) வெளியிட்ட செய்தி. “62000 ஈமெயில் கணக்குகளை அவற்றின் பாஸ்வேர்ட்களுடன் தாம் திருடியிருப்பதுடன் அவற்றை அனைவராலும் பார்க்க முடியுமான விதத்தில் ஒரு இணையதளத்தில் பிரசுரித்துள்ளோம்” என்ற செய்தியே பலரையும் அன்று திக்குமுக்காடச் செய்தது. ஈமெயில் பயனர்கள் தமது ஈமெயில் கணக்கு முகவரியும் அதன் பாஸ்வேர்டும் திருடப்பட்டுள்ளதா என்பதனை அறிந்துகொள்வதற்காக ஒரு இணையப் பக்கத்தின் இணைப்பையும் (Web Link) அத்துருவிகளின் குழுமம் வெளியிட்டிருந்தது. அந்த இணைப்பினூடாகச் சென்று தமது ஈமெயில் முகவரியைத் தட்டச்சு செய்து தேடுவதன் மூலம் அறிந்துகொள்ளலாம்.

குறிப்பு :- 2011 Sept 01 - 14 எங்கள்தேசம் பத்திரிகையில் பிரசுரமானது.

06 September 2011

மரத்தில் செதுக்கப்பட்டுள்ள சிற்பங்கள்

 ஆலிப் அலி (இஸ்லாஹி)

 ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

05 September 2011

ஒவ்வொன்றும் தமது பாதையில் நீந்துகின்றன.

“அவனே இரவையும் பகலையும் சூரியனையும் சந்திரனையும் படைத்தான். (அவை) ஒவ்வொன்றும் தமக்குரிய பாதைகளில் நீந்திச்செல்கின்றன” (21:33)

அல்லாஹ் ஒரு உதாரணத்திற்காக மேற்கூறிய நான்கு விடயங்களையும்  எமக்கு எடுத்துக்காட்டுகின்றான். இவை மாத்திரம்தான் நீந்துகின்றன என்று பொருளல்ல. இப்பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துப் பொருட்களும் தமக்குரிய ஓடு பாதையில் நீந்துவதைப்போன்று சுற்றிக்கொண்டுதான் இருக்கின்றன. இது அணு முதல் அண்டத்திலுள்ள கோள்கள், கிரகங்கள், நட்சத்திரங்கள், பால்வீதிகள் வரை நீண்டு செல்கின்றது. இங்கே உள்ள சில படங்களின் மூலம் இதனை உங்களால் புரிந்துகொள்ள முடியும். இன்ஷா அல்லாஹ்…

02 September 2011

இயற்கையின் அழகோ பேரழகு!

ஆலிப் அலி (இஸ்லாஹி)

ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

Related Posts Plugin for WordPress, Blogger...