ஆலிப் அலி (இஸ்லாஹி)
17 September 2011
அநுராதபுரத்தில் உடைத்து நொறுக்கப்பட்ட பள்ளிவாசல்: பேரினவாதிகளின் வெறிச் செயல்!
அநுராதபுரத்தில் அமைந்திருந்த பள்ளிவாசலொன்றை பௌத்த பேரினவாதிகள் இடித்துத் தகர்த்துள்ளனர். துட்டகைமுனு மன்னனின் சமாதி அமைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு அருகில் அமைந்திருந்த காரணத்தினாலேயே பௌத்த பேரினவாதிகள் கடும் கோபத்துடன் பிரஸ்தாப பள்ளிவாசலை இடித்துத் தகர்த்துள்ளனர்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
உங்கள் கருத்து:
Labels:
திடீர் NEWS
16 September 2011
புவியின் கவசம் ஓசோன் மண்டலம் (Ozone)
September 16 ம் திகதி சர்வதேச ஓசோன் தினம்.
ஓசோன் படை உற்பத்தியாவதற்கு ஒட்சிசன் வாயு மிக மிக அவசியம். அதேபோன்று இவ்வொட்சிசன் வாயு உருவாக பச்சை நிறத்தாவரங்களும், சூரியஒளியும் அவசியப்படுகின்றது. தாவரங்களின் ஒளித்தொகுப்பு மூலம் வெளியாகும் ஒட்சிசன் வாயுவின் மூலமே இவ்வோசோன்படை உருவாகின்றது. எப்படியென்றால் ஒட்சிசன் வாயுக்கள் சூரியனில் இருந்து பூமியை நோக்கி வரும் UV (Ultra violet rays) கதிர்களைப் பயன்படுத்தி ஓசோன்களை உற்பத்தியாக்குகின்றன. இவ்வாறு மூன்று O2 அணுக்கள் ஒன்றுசேர்ந்தே ஓசோன் உருவாகின்றது. எனவே ஓசோனின் விஞ்ஞானக் குறியீடு “O3” என்றவாறு அமைகின்றது. இவ்வாறு ஒட்சிசன் உற்பத்தியும் UV கதிர்களும் கூடுதலாகக் கிடைக்கின்ற வெப்பவலய நாடுகளிலேயே ஓசோன்படை அதிகமாக உற்பத்தியாகின்றது.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
உங்கள் கருத்து:
Labels:
ISLAM - Science,
சமூகவியல்
மனிதனும் பருவங்களும்
அல்லாஹ் அல்குர்ஆனில் மனிதனது பருவங்கள் பற்றி பின்வருமாறு விளக்குகின்றான். “அவன் உங்களை (ஆரம்பத்தில்) மண்ணிலிருந்து படைத்தான். பின்னர் இந்திரியத் துளியிலிருந்தும் பின்னர் இரத்தக் கட்டியிலிருந்தும் (உருவாக்கி) பின்னர் உங்களைக் குழந்தையாக வெளியாக்குகிறான். பின்னர் (படிப்படியாக) நீங்கள் உங்கள் வாலிபத்தை அடைவதற்காகவும் பின்னர் நீங்கள் முதியோராக ஆவதற்காகவும் (உங்களைப் படைத்தான். இதற்கு) முன்பே மரணிப்பவரும் உங்களில் இருக்கிறார்கள். இன்னும் குறிப்பிடப்பட்ட தவணையை நீங்கள் அடைவதற்காகவும் (இதிலிருந்து அவனது வல்லமையை) நீங்கள் விளங்கிக்கொள்வதற்காகவும் (இவ்வாறு செய்கின்றான்.)” (அல் முஃமின் - 40 : 67)
ஆலிப் அலி (இஸ்லாஹி)
உங்கள் கருத்து:
Labels:
சிந்தனைக்கு
14 September 2011
Subscribe to:
Posts (Atom)










