அம்ரிப்னு ஆஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ஒரு முறை நாம் நபி(ஸல்) அவர்களைச் சூழ அமர்ந்திருந்தோம். அப்போது அண்ணலாரிடம்“கொன்ஸ்தாந்து நோபிள், ரோம் இவற்றில் எது முதலில் வெற்றிகொள்ளப்படும்?” என வினவப்பட்டது. அதற்கவர் “ஹிரகல் மன்னனின் நகரம் - கொன்ஸ்தாந்து நோபிள் - தான் முதலில் வெற்றிகொள்ளப்படும் என்றார்கள்.”
(ஆதாரம் - முஸ்னத் அஹ்மத் :6645)
கொன்ஸ்தாந்து நோபிள் என்பது துருக்கியின் தற்போதைய பெரிய நகரங்களில் ஒன்றான இஸ்தான்பூலாகும். இது அரபு மொழியில் குஸ்தன்தீனியா என்றழைக்கப்படுகிறது. அன்று நபியவர்காலத்து பெரும் வல்லரசான ரோம் சாம்ராஜ்யம் இரண்டு கிளைகளைக் கொண்டு காணப்பட்டது. ஒன்று, ரோமைத் தலைநகராகக்கொண்ட மேற்கு ராஜ்யம். மற்றையது, கொன்ஸ்தாந்து நோபிளைத் தலைநகராகக்கொண்ட கிழக்கு ராஜ்யம். அக்கிழக்கு ராஜ்யம்தான் பைஸாந்தியப் பேரரசு எனப்பட்டது. பெரும் வல்லரசாகத் திகழ்ந்த இந்நகரம் ஒரு நாள் முஸ்லிம்களால் வெற்றிகொள்ளப்படுமென நபியவர்கள் எதிர்வுகூறியதே மேற்கண்ட நபிமொழி. இதுபற்றி மற்றுமொருமுறை நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்.
கொன்ஸ்தாந்து நோபிள் ஒரு வீரனால் வெற்றிகொள்ளப்படும். அத் தளபதிதான் சிறந்த தளபதி. அந்த சேனைதான் சிறந்த சேனை என்றார்கள். (முஸ்னத் அஹ்மத்)
ஆலிப் அலி (இஸ்லாஹியா வளாகம்)

உங்கள் கருத்து: