"ஒரு நந்தவனத்தின் அழகே அங்கே படபடத்துக் கொண்டிருக்கும் பட்டாம்பூச்சிகள்தான்"
என்கிறார் கவிஞர் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த்.
வண்ணத்துப் பூச்சிகளின் அழகு பார்ப்போரை மெய்சிலிர்க்க
வைக்கின்றன. விதம் விதமான வடிவங்களில் பல்வேறு நிறங்களில் வண்ணமயமாய்க் காட்சியளிப்பவைதான்
வண்ணத்துப் பூச்சிகள் (Butterflies).
இவை பட்டாம்பூச்சி என்றும் அழைக்கப்படுகின்றன. வண்ணத்துப்
பூச்சிகளில் 15,000 முதல் 20,000 வகையான பல்வேறு வகை இனங்கள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள்
கூறுகின்றனர். பொதுவாக அனைத்து பூச்சிகளைப் போன்றும்
வண்ணத்துப் பூச்சிகளுக்கும் 6 கால்கள் உள்ளன.
குறிப்பு - அகரம் சஞ்சிகையில் பிரசுரமான எனது ஆக்கம்
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...