“ஒராம் ஒரு ஊரிலே…” என்று
ஆரம்பிக்கின்ற அனேகமான சிறுவர் கதைகளில் நரிக்கு கட்டாயம் ஒரு முக்கிய இடமுண்டு.
பாட்டி வடை சுட்ட கதையில் வரும் நரியின் தந்திரக் குணத்தை பாலர் பாடசாலையில்
கேட்டுப் படித்த ஞாபகம் என்னைப் போலவே உங்களுக்கும் இருக்கும். கவிதைகளிலும்,
பாடல்களிலும் கூட நரி இடம்பெறுகின்றது. அண்மைக் காலமாக “நரி வருது, நரி வருது
காக்கா காக்கா பறந்து வா…” என்ற சிறுவர் பாடல் அனேகர் மத்தியிலும் பிரபல்யமடைந்து
வருகின்றது. ஒரு காலத்தில் எமது நாட்டிலும் கிராமப் புறங்களில் எல்லாம் நரிகள்
பரந்து வாழ்ந்துள்ளன. எமது மூத்த தாத்தா, பாட்டி மாரிடம் கேட்டால் சொல்வார்கள். அந்த
அளவுக்கு முன்னேய காலங்களில் மிக இலகுவாக நரிகளை எமது கிராமப் புரங்களில் காண
முடியுமாக இருந்துள்ளது. ஆனால் இன்று மிருகக் காட்சி சாலையில் மட்டுமே சென்று
பார்க்க முடியுமான அளவுக்கு நரிகள் அழிந்து குறைந்து சென்றுள்ளன. காண அரிதாகிச்
சென்றுள்ள நரிகளைப் பற்றியும் அவற்றின் பயன்களைப் பற்றியும் இத்தொடரில் பார்ப்போம்.
அஷ்.எம்.என்.ஆலிப்
அலி (இஸ்லாஹி) B.A
Dip. In psychological Counseling
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...