கடலின் மேல் மட்டத்திலிருந்து
40 மீட்டர் தூரம் வரைதான்
திறமைவாய்ந்த நீச்சல் வீரர்கள்கூட பாதுகாப்பான நீச்சல் உடைகளுடன் ஒக்சிஜன் சிலின்டர்களையெல்லாம்
சுமந்துகொண்டு மூழ்குவார்கள். இதற்கு அப்பால் நீச்சல் உடையுடன் நீந்திச் செல்வது உயிராபத்தை
ஏற்படுத்தும். எனவே ஒரு நீர் மூழ்கியின் உதவியுடன்தான் செல்லவேண்டும். கடலின் மேல்
மட்டத்திலிருந்து 301 மீட்டர் ஆழம்வரை
சென்றால் இது பிரான்ஸில் உள்ள உலகப் பிரபல்யம்வாய்ந்த ஈபில் கோபுரத்தின் (Eiffel tower) உயரத்திற்கு நிகரான
ஆழமாகும். இன்னும் கீழே 500 மீட்டர் ஆழம் வரையான
பகுதியில்தான் நீளத் திமிங்கிளங்கள் சஞ்சரிக்கின்றன. இதற்கு அப்பால் இவற்றால்கூட செல்லமுடியாது.
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...