இலங்கையில் நடாத்தப்படுகின்ற பரீட்சைகள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கான விசேட ஏற்பாடொன்றை கடந்த மாதம் (ஜனவரி) 25ஆம் திகதி முதல் பரீட்சைகள் திணைக்களம் ஆரம்பித்துள்ளதாக திணைக்களத்தின் ஆணையாளர் நாயம் W.M.N.J.புஷ்பகுமார தெரிவித்துள்ளார். அதற்கமைய தேவையான தகவல்களைப் பெற்றுக்கொள்ள 1911 என்ற துரித தொலைபேசி இலக்கத்தினூடாகவோ அல்லது 011-2177771 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாகவோ அழைப்பை ஏற்படுத்த முடியும் என்றும் 011-2177411, 011-2785220 என்ற பெஃக்ஸ் இலக்கங்களுடாகவும் பொதுமக்களுக்குத் தேவையான தகவல்களைப் பெற்றுக்கொள் முடியும் எனவும் அறிவித்தார்.
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...