இஸ்லாமிய அழைப்புப் பணிக்கா இந்தியா, பாக்கிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகைதந்துள்ள 161 தப்லீக் ஜமாஅத் சகோதரர்களை ஒரு வாரத்திற்குள் நாட்டைவிட்டும் வெளியேறுமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது. டுவரிஸ்ட் வீசா மூலம் இலங்கைக்கு வருகை தரும் இவர்கள் மதத் தீவிரவாதத்தை மக்கள் மத்தியில் போதிப்பதாக பொய்யானதொரு குற்றச்சாட்டை அரசாங்கம் சுமத்தியுள்ளது. மேற்படி அறிவிப்பின் பின் 60 பேர்களே நாட்டைவிட்டும் வெளியேறியிருப்பதாக உள்நாட்டு குடிவரவு, குடியகழ்வுத் திணைக்களத்தின் அதிகாரி சூலாநந்த பெரேரா திவய்ன பத்திரிகைக்கு அறிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...