இவ்வாண்டு (2012) அமெரிக்காவின் ஜனாதிபதித் தேர்தலில் ஒபாமாவுக்குப் போட்டியாக குடியரசுக் கட்சியில் போட்டியிடவுள்ள நியுட் கிங்ரிச் “பலஸ்தீன மக்கள் இஸ்ரேலை அழிப்பதற்காக உருவாக்கப்பட்டவா்கள்” என்று விசமக் கருத்தொன்றை வெளியிட்டுள்ளார். மேலும் அவர் “பலஸ்தீன் என்றொரு தனிநாடு இருந்ததே இல்லை என்றும் 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பம்வரை உஸ்மானிய சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாகவே அது இருந்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். யூதா்களின் ஆதரவின்றி அமெரிக்காவில் யாரும் ஜனாதிபதியாக முடியாது என்பதால்தான் கிங்ரிச்சும் இவ்வாறான கருத்துக்களை வெளியிடுகின்றார் போலும். உஸ்மானிய கிலாபத்தை வீழ்த்தி இஸ்ரேல் என்றொரு சட்டவிரோத நாட்டை அமைத்துக்கொண்ட வரலாறு கிங்ரிச்சிற்குத் தெரியாதிருக்க முடியாது.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...