அறிமுகம்
பல்வேறு பண்புகளில்
கறையான்கள் சிறப்புப் பெறுகின்றன. தோற்ற அமைப்பு, கூட்டமைப்பு, வாழ்க்கை முறை என நிறையக் கூறலாம். அல்லாஹ்வின்
இச்சிறு படைப்பில் இருக்கும் மகத்தான அற்புதங்கள் என்னவென்று இத்தொடரில் கற்றுக்கொள்வோம்.
கறையான்கள் Termites என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகின்றன.
எறும்பு, தேனி போன்று கறையான்களும்
கூட்டமாக, சமூகமாக வாழும் பூச்சியினமாகும்
(Social insect). கரையான்கள் Isoptera
(சம இறகிகள்) என்ற வரிசையைச்
சேர்ந்தன. Iso என்றால்,
‘ஒரே மாதிரி ‘ என்றும் Ptera என்றால், ‘இறக்கை ‘ என்றும் பொருள். அதாவது, கரையான்களின் ஒரு வகையான ஈசல்களின் முன் மற்றும்
பின் இறக்கைகள் ஒரே மாதிரி இருப்பதால், இந்தப் பெயர் வந்துள்ளது. கறையான்கள் வெள்ளை எறும்புகள் என்றும் அழைக்கப்படுகின்றன. காரணம் அவற்றின் வெளித்தோற்ற
அமைப்புதான்.
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...