சிறு வயதிலிருந்தே செல்லப்பிராணிகளை வளர்ப்பதில் எனக்கு மிகுந்த ஆர்வமும் ஆசையும் இருக்கின்றது. தொலைக்காட்சி பார்ப்பதென்றாலும் உயிரினங்கள் தொடர்பாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளைத்தான் அதிகம் விரும்பிப் பார்ப்பேன். Discovery Channel, Animal Planet போன்ற செனல்கள் எனக்கு அளாதிப் பிரியம். இந்த ஆர்வம்தான் என்னை இறை படைப்புகள் தொடர்பாக தேடவும் படிக்கவும் தூண்டியது. சிறு சிறு ஆய்வாராய்ச்சிகளும் செய்துள்ளேன்.
சிறுவர்களுக்கான மாதாந்த சஞ்சிகையான அகரம் சஞ்சிகையில் “அல்லாஹ்வின் அற்புதப் படைப்புகள்” என்ற தலைப்பில் இது தொடர்பான கட்டுரைகளைத் தொடராக எழுதிவருகின்றேன். இதுவரை 85 தொடர்களை எழுதியுள்ளேன். அத்தோடு “படைப்பினங்களில் படைப்பாளனின் கைவண்ணம்” என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தையும் எழுதியுள்ளேன். இந்த ஆர்வத்தின் தொடர் தற்போது வீட்டில் ஒரு மினி Zoo வையே வைத்துள்ளேன். நிறைய செல்லப்பிராணிகள் இருக்கின்றன. இந்த வீடியோவைப் பார்த்தால் புரிந்துகொள்ள முடியும்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...