இவ்வருடம் சமாதானத்திற்கான நோபல் விருது மூன்று பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு பேர் மேற்கு ஆபிரிக்க நாடான லைபீரியாவைச் சேர்ந்தவர்கள். முதலாமவர் லைபீரியாவின் தேர்தல் மூலம் தெரிவான முதலாவது பெண் ஜனாதிபதியான எலன் ஜோன்ஸன் சிர்லீப் என்பவரும் இரண்டாமவராக அதே நாட்டைச் சேர்ந்த பெண் சமூக செயற்பாட்டாளரான லெய்மாஃ ஜீபோவி என்பவரும் மூன்றாவதாக யெமன் நாட்டைச் சேர்ந்த பத்திரிகையாளரும் ஜனநாயக ஆதரவுச் செயற்பாட்டாளருமான தவக்குல் கர்மான் ஆகியோருமவர்.
நோபல் பரிசு வரலாற்றில் பெண்களுக்கு மிக அரிதாகவே விருதினைப் பெறும் வாய்ப்புக் கிடைக்கின்றது. ஆனால் இத்தடவை மூன்று பெண்கள் நோபல் பரிசு பெற்றிருப்பதும் அதிலும் முதல் தடவையாக ஒரு அறபுப் பெண் விருது பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்க செய்தியாகும்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...