"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

08 November 2015

சமாதானப் பறவை புறா

எனது வீட்டில் இரண்டு மணிப் புறாக்களும் ஆறு மாடப்புறாக்களும் இருக்கின்றன. அவற்றை ஆசையாக வளர்த்துவருகின்றேன். புறா வளர்ப்பின்போது அவற்றில் பல்வேறு அற்புதங்களைக் கண்டு நான் மெய்சிலிர்த்த சந்தர்ப்பங்கள் பல உண்டு. இத்தொடரில் அவற்றை உங்களுடன் பரிமாறிக்கொள்ள நினைக்கின்றேன்புறா முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் பறவையினத்தைச் சேர்ந்தது. உயிரின வகைப்பாட்டில் இது கொலம்பிடே (Columbidae) குடும்பத்தைச் சேர்ந்தது. புறாக்களை இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். ஒன்று மணிப்புறா (Dove), மற்றையது மாடப்புறா (Pigeon). உருவத்தில் சிறிதாக இருப்பது மணிப்புறா. காட்டுப் புறா என்றும் சொல்லலாம். இவற்றை அடைத்து வளர்ப்பது சிறமம். பழக்கப்படுத்திக்கொள்வதும் கடினம். உருவத்தில் பெரிதாக இருப்பது மாடப்புறா. இதனை வீட்டுப் புறா என்று சொல்லலாம். இவ்வகைப் புறாக்களை வீட்டில் வளர்ப்பதும் பழக்கப்படுத்திக்கொள்வதும் மிக மிக சுலபம். இவ்விரண்டும் அல்லாமல் புறாக்களின் குடும்பத்தில் அழகழகான, வித்தியாசமான வடிவங்களில் சுமார் 310 வகை இனங்கள் உள்ளன. அனைத்துப் புறாக்களும் உலகின் பனி, பாலைவனப் பிரதேசங்கள் தவிர்ந்த மற்ற எல்லா இடங்களிலும் வாழ்கின்றன.

ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

29 October 2015

ஆணும் பெண்ணும் சமமானவர்களல்லர் – ஒரு உளவியல் பார்வை

ஆணையும் பெண்ணையும் படைத்த அல்லாஹ் திருமறையில் ஆணும் பெண்ணும் சரி சமமானவர்கள் அல்லர் என்று கூறுகின்றான். இந்த வசனம் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் இருக்கும் அடிப்படை வித்தியாசங்களைக் வேறுபிரித்துக் காட்ட விளைகின்றது. அத்தோடு இந்த வித்தியாசத் தன்மைதான் இருவரும் சேர்ந்து வாழ வழியமைக்கின்றது. ஆண் பெண்ணின் மீதும் பெண் ஆணின் மீதும் தேவையுடையவர்கள் என்பதை உண்ர்த்துகின்றது. ஆணோ, பெண்ணோ இருவரும் அரைகுறையானவர்கள். இருவரும் இணையும்போதுதான் அங்கு பூரணத்துவம் ஏற்படுகின்றது. திருமண வாழ்க்கையில் இந்த ஆண் பெண் வித்தியாசத்தை விளங்கியிருக்கும்போது பிரச்சினைகள் ஏற்படுவது மிகவும் குறைவு.

My Birds Aviary

சிறு வயதிலிருந்தே செல்லப்பிராணிகளை வளர்ப்பதில் எனக்கு மிகுந்த ஆர்வமும் ஆசையும் இருக்கின்றது. தொலைக்காட்சி பார்ப்பதென்றாலும் உயிரினங்கள் தொடர்பாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளைத்தான் அதிகம் விரும்பிப் பார்ப்பேன். Discovery Channel, Animal Planet போன்ற செனல்கள் எனக்கு அளாதிப் பிரியம். இந்த ஆர்வம்தான் என்னை இறை படைப்புகள் தொடர்பாக தேடவும் படிக்கவும் தூண்டியது. சிறு சிறு ஆய்வாராய்ச்சிகளும் செய்துள்ளேன். 
சிறுவர்களுக்கான மாதாந்த சஞ்சிகையான அகரம் சஞ்சிகையில் “அல்லாஹ்வின் அற்புதப் படைப்புகள்” என்ற தலைப்பில் இது தொடர்பான கட்டுரைகளைத் தொடராக எழுதிவருகின்றேன். இதுவரை 85 தொடர்களை எழுதியுள்ளேன். அத்தோடு “படைப்பினங்களில் படைப்பாளனின் கைவண்ணம்” என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தையும் எழுதியுள்ளேன். இந்த ஆர்வத்தின் தொடர் தற்போது வீட்டில் ஒரு மினி Zoo வையே வைத்துள்ளேன். நிறைய செல்லப்பிராணிகள் இருக்கின்றன. இந்த வீடியோவைப் பார்த்தால் புரிந்துகொள்ள முடியும்.

09 October 2015

இரத்தத்தில் இறைவன் வைத்துள்ள அற்புதங்கள்

மனித உடலை அல்லாஹ் வடிவமைத்திருக்கும் நேர்த்தியையும், அதிலுள்ள நுணுக்கங்களையும் சற்று உற்றுப்பார்த்தால் அதில் அல்லாஹ்வின் அருளையும் அவனது ஆற்றலையும் புரிந்துகொள்ளலாம். மனித உடலே இறை இருப்புக்கான ஓர் அத்தாட்சிதான். அல்லாஹ் கூறுகின்றான். سَنُرِيهِمْ آيَاتِنَا فِي الْآفَاقِ وَفِي أَنْفُسِهِمْ حَتَّىٰ يَتَبَيَّنَ لَهُمْ أَنَّهُ الْحَقُّ நிச்சயமாக (அவனே) உண்மையானவன் என்று அவர்களுக்குத் தெளிவாகும் பொருட்டு நம்முடைய அத்தாட்சிகளை (உலகத்தின்) பல கோணங்களிலும், (ஏன்) அவர்களுக்குள்ளேயும் நாம் காண்பிக்கின்றோம். (41:53)

11 September 2015

முளைகளாக இருக்கும் மலைகள்

மலை, Mountain என்று ஆங்கிலத்திலும் ஜபலுன் (جَبَلٌ) என்று அரபு மொழியிலும் அழைக்கப்படுகின்றது. அல்குர்ஆனில் ஜபல் என்று ஒருமையில் 6 தடவைகளும் ஜிபால் என்று பண்மையில் 32 தடவைகளும் வந்துள்ளன. இத்துனை தடவைகள் மலையைப் பற்றி அல்குர்ஆனில் திரும்பத் திரும்ப சொல்லப்பட்டுள்ளதென்றால் அல்லாஹ் அதனை ஆராய்ந்து பார்க்கின்றவர்களுக்கு அதில் பல அத்தாட்சிகளையும் உயிரினங்களின் வாழ்க்கைக்குப் பல பயன்பாடுகளையும் வைத்திருக்கின்றான் என்பதனைப் புரிந்துகொள்ளலாம். உயிர் வாழ்க்கைக்கு எப்படியெல்லாம் மலைகள் உதவிசெய்கின்றன என்பது பற்றி பல ஆராய்ச்சிகள் நடைபெற்றுவருகின்றன. இதுபற்றிய கல்விக்கு மலையியல் கல்வி (Mountainology) என்று பெயர்.

Related Posts Plugin for WordPress, Blogger...