எனது வீட்டில் இரண்டு மணிப் புறாக்களும் ஆறு மாடப்புறாக்களும்
இருக்கின்றன. அவற்றை ஆசையாக வளர்த்துவருகின்றேன். புறா
வளர்ப்பின்போது அவற்றில் பல்வேறு அற்புதங்களைக் கண்டு நான் மெய்சிலிர்த்த
சந்தர்ப்பங்கள் பல உண்டு. இத்தொடரில் அவற்றை உங்களுடன்
பரிமாறிக்கொள்ள நினைக்கின்றேன். புறா முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் பறவையினத்தைச் சேர்ந்தது. உயிரின வகைப்பாட்டில் இது கொலம்பிடே (Columbidae) குடும்பத்தைச் சேர்ந்தது.
புறாக்களை இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். ஒன்று மணிப்புறா (Dove),
மற்றையது மாடப்புறா (Pigeon). உருவத்தில்
சிறிதாக இருப்பது மணிப்புறா. காட்டுப் புறா என்றும் சொல்லலாம். இவற்றை அடைத்து வளர்ப்பது சிறமம். பழக்கப்படுத்திக்கொள்வதும்
கடினம். உருவத்தில் பெரிதாக இருப்பது மாடப்புறா. இதனை வீட்டுப் புறா என்று சொல்லலாம். இவ்வகைப்
புறாக்களை வீட்டில் வளர்ப்பதும் பழக்கப்படுத்திக்கொள்வதும் மிக மிக சுலபம்.
இவ்விரண்டும் அல்லாமல் புறாக்களின் குடும்பத்தில் அழகழகான, வித்தியாசமான வடிவங்களில் சுமார் 310 வகை இனங்கள் உள்ளன. அனைத்துப் புறாக்களும் உலகின் பனி, பாலைவனப் பிரதேசங்கள் தவிர்ந்த மற்ற எல்லா இடங்களிலும் வாழ்கின்றன.
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...