தவளைகள் நீரிலும் நிலத்திலும்
வாழும் தகவமைப்பைப் பெற்ற இருவாழ்விகளாகும் (Amphibians). தவளை என்று கூறும்போது அதில் இரண்டு பிரிவுகள் இருக்கின்றன.
ஒன்று தவளை, மற்றையது தேரை. உலகத்தில்
6,771 வகையான தவளை, தேரை வகைகள் உள்ளன.
தவளைக்கும் தேரைக்கும் உள்ள அடிப்படை வித்தியாசம், தவளையின் தோல் காய்ந்து சொரசொரப்பாகக் காணப்படும்.
தேரையின் தோல் வழுவழுப்பாக இருக்கும். தவளைகள் கறுப்பு, சாம்பள் போன்ற மங்களான
நிறங்களில் இருக்கும். ஆனால் தேரைகள் கண்கவர் அழகிய பிரகாசமான நிறங்களில் எல்லாம் இருக்கும்.
தவளைக்கு விஷ உறுப்பு கிடையாது. தேரைக்கு உண்டு. முக்கியமாக நீர், அதை ஒட்டியுள்ள நிலப்பகுதியில்
தவளை வசிக்கும். தேரை நிலத்தில் மட்டுமே காணப்படும். முழுவளர்ச்சி அடந்த தவளைகள் நீண்ட
பின்னங்கால்களையும் திரண்டு உருண்ட உடலையும் விரல்களுக்கு இடையே சதை இணைப்புள்ள மடிப்புகளையும்
இரு புறமும் பிதுங்கிய இரு கண் முழிகளையும்கொண்ட வாலில்லா ஓர் விலங்குதான் தவளை.
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...