“அறிந்துகொள்ளுங்கள் அல்லாஹ்வை திக்ர் செய்வதுகொண்டுதான் இதயங்கள் அமைதிபெறுகின்றன.” (அர்ரஃது : 28)ஆக இறை சிந்தனை இருக்கும்போதெல்லாம் உள்ளம் அமைதியடைந்திருக்கும். இறை சிந்தனை அற்றுப்போய் என்று சைத்தானிய சிந்தனை உள்ளத்தை ஆக்கிரமிக்கின்றதோ அன்று உள்ளம் அமையிழந்து போகின்றது. சைத்தான் எப்போதும் மனித இதயங்களை ஆக்கிரமிக்கவே முயற்சிக்கின்றான். ஏனெனி்ல் மனித இதயம் நடத்தைகளைத் தீர்மானிக்கின்றதல்லவா? அதனால்தான்.
அத்தோடு இதயம் இரத்தத்தை உடல் முழுதும் கொண்டு செல்வதால் சைத்தான் இதயத்தில் வந்து அமர்ந்தால்தான் அவனால் இலகுவாக உடல் முழுதும் நாடி நாளங்களெல்லாம் ஓட முடியும். சைத்தான் மனிதனது நாடி நாளங்களெல்லாம் ஓடுகின்றான் என்பது ஆதாரபூர்வமான நபி மொழி என்பதையும் ஞாபத்திற்கொள்ளவேண்டும்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...