ஒரு சகோதரர் வெறுப்பதை நாம் பேசுவதே புறம் ஆகும். அது அவருடைய உடல், மார்க்கம் மற்றும் உலக விஷயம், மனோநிலை, நடைமுறை, குணம்.. ஆகிய எதனோடு தொடர்புடையதாக இருந்தாலும் சரியே! புறம் பேசுவதில் பல வகைகள் உள்ளன. ஒரு முஸ்லிமின் குறையைக் கூறுவதும் பிறரை இழிந்துரைப்பதும் புறம் பேசுவதில் ஒருவகையே! அல்லாஹ் நாடினால் தன் அடியானின் பாவங்களை மன்னித்துவிடுவான். ஆனால் அவ்வடியான் மற்றுமொரு அடியானுக்கு, சகோதரனுக்கு அவனுடைய கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படும் விதமாக இவ்வுலகில் நடந்திருப்பானாகில் அவன் மன்னிக்கும் வரை அக்குற்றத்தை அல்லாஹ்வும் மன்னிக்கப்போவதில்லை.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...