கடந்த ஜுன் மாதம் 16ம் திகதி ஈமெயில் கணக்குகளைப் பரவலாகப் பயன்படுத்தும் பலருக்கும் ஒரு அபாயகரமான நாள். அதற்குக் காரணம் “லூல்ஸெக் - LilzSec (Lulz Security)” என்ற துருவிகள் குழுமம் (Hackers) வெளியிட்ட செய்தி. “62000 ஈமெயில் கணக்குகளை அவற்றின் பாஸ்வேர்ட்களுடன் தாம் திருடியிருப்பதுடன் அவற்றை அனைவராலும் பார்க்க முடியுமான விதத்தில் ஒரு இணையதளத்தில் பிரசுரித்துள்ளோம்” என்ற செய்தியே பலரையும் அன்று திக்குமுக்காடச் செய்தது. ஈமெயில் பயனர்கள் தமது ஈமெயில் கணக்கு முகவரியும் அதன் பாஸ்வேர்டும் திருடப்பட்டுள்ளதா என்பதனை அறிந்துகொள்வதற்காக ஒரு இணையப் பக்கத்தின் இணைப்பையும் (Web Link) அத்துருவிகளின் குழுமம் வெளியிட்டிருந்தது. அந்த இணைப்பினூடாகச் சென்று தமது ஈமெயில் முகவரியைத் தட்டச்சு செய்து தேடுவதன் மூலம் அறிந்துகொள்ளலாம்.
குறிப்பு :- 2011 Sept 01 - 14 எங்கள்தேசம் பத்திரிகையில் பிரசுரமானது.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...