வடபசுபிக் சமுத்திரத்தில்
கடற்கரையிலிருந்து 2000 மைல்களுக்கு அப்பால்
உள்ள ஒரு தீவு குறித்து MIDWAY
Film
நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட
3 நிமிட குறுந்திரைப்படம்
ஒன்று பார்க்கக்கிடைத்தது. மனித நடமாட்டமில்லாத தொலைதூரமிருக்கும் அத்தீவில் ஒரு நாளைக்கு
மட்டும் நூற்றுக் கணக்கான எல்பட்ராஸ் பறவைகள் இறந்து மடிகின்றன. காரணம் 2000 மைல்களுக்கு இப்பகுதியில்
இருக்கும் மனிதர்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் நச்சுப் பொருட்கள்தான். இறந்த இடத்தில்
பறவைகளின் உக்கிப்போன எச்சங்கள் இருந்தாலும் இன்னும் உக்காது அவற்றின் வயிற்றில் இருக்கும்
பிளாஸ்டிக் பொருட்களை ஒரு சுற்றுச் சூழல் ஆர்வளர் புகைப்படமெடுப்பதை அக்குறுந்திரைப்படம்
சுட்டிக்காட்டுகிறது.
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...