நாம் பார்க்கும் திசையெல்லாம் அழகுரக்
காட்சியளிக்க முக்கிய காரணம் அல்லாஹ் அவனது படைப்புகள் அனைத்தையும் பல்வேறு
நிறக்கலவையினால் படைத்திருப்பதால்தான். பறவைகள், மிருகங்கள், பூச்சிகள்,
தாவரங்கள், புற்பூண்டுகள், தரைத்தோற்றங்கள் என அனைத்திலும் இறைவன் தீட்டிய
வண்ணங்களின் மகிமையைக் கண்டுகொள்ள முடியும். மனிதன் செயற்கையாகச் செய்யும்
பொருட்களிலும்கூட வண்ணங்கள் முதலிடம் பெறுவதை அவதானிக்கலாம். அல்லாஹ்
திருக்குர்ஆனிலும் பல்வேறு இடங்களில் நிறங்கள் பற்றிக் கூறி அவனது படைப்புகளை
பல்வேறு நிறங்களில் படைத்திருப்பதாகவும் அதுபற்றி சிந்திப்பவர்களுக்கு
அத்தாட்சிகள் இருப்பதாகவும் கூறுகின்றான்.
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...