ஒருவர், நாளொன்றுக்கு ஐந்து மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கினால் அவரது பாலியல் உணர்வை தூண்டும் பிரதான ஹார்மோனின் அளவு குறைந்துவிடும் என்று சிகாகோ பல்கலைக் கழகம் சார்பில் மேற்கொண்ட ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. அதில் குறிப்பாக இளம் வயதினர் 5 மணி நேரங்களுக்கும் குறைவாகத் தொடர்ந்து ஒரு வாரத்திற்குத் தூங்காதிருந்தால் இதன் பாதிப்பை ஒரு வாரத்திற்குள்ளாகவே அனுபவிக்க முடியும் என அவ் ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்வாய்வுக்காகப் பல்கலைக்கழக வளாகத்திலிருந்து 10 பேர் பயன்படுத்தப்பட்டுள்ளனர். ஆண்களின் பாலியல் உணர்வைத் தூண்டக்கூடிய ’டெஸ்ட்டாஸ்ட்டுரோன்’ எனும் ஹோமனின் அளவு 6 மணி நேரங்களுககும் குறைவாகத் தூங்குவதனால் குறைவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...