உலகின் செல்லப்பிராணிகளின் வரிசையில் மூன்றாவது
இடத்தை இந்த லவ்பேட்ஸ் பறவைகள் பிடித்துள்ளன. முதல் இரண்டும் நாய், பூனை
என்பனவாகும். லவ்பேட் என்பது இப்பறவை இனங்களின் செல்லப் பெயர்தான். ஆனால் அவற்றின்
உண்மையான பெயர் பட்ஜ்ரிகர் (Budgerigar) ஆகும். Melopsittacus undulates என்பது
இதன் விஞ்ஞானப் பெயர். மற்றைய பறவையினங்களுக்கு வைத்திருக்கும் பெயரைவிட இதன்
பெயர் சற்று வித்தியாசம்தான். லவ்பேட் - காதல்
பறவை. காதலின் சின்னமாகவும் இப்பறவை கருதப்படுகின்றது. லவ்பேட்… லவ்பேட்… என்று பழைய காலப் பாடல் ஒன்றும் உள்ளது. இப்பறவையினங்களின் குரும்புத்தனமான சேட்டைகளும் துரு துரு வென்ற உட்சாகமும் கீச் கீச் என்ற சப்தமும் பல வர்ண நிறமும்தான் அவை செல்லப் பிராணியாக
வளர்க்கப்படக் காரணம். 1805 ஆம்
ஆண்டில்தான் இப்பறவையினம் கண்டுபிடிக்கப்பட்டது. இத்தொடரில் லவ்பேட் பறவையினங்களின் வாழ்க்கையின் சுவாரஷ்யமான பக்கங்களைப் படித்துப் பார்ப்போம்.
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...