இன்று பூமியில் 700 கோடிப்
பேரையும் தாண்டி சனத்தொகை அதிகரித்துக்கொண்டு செல்கின்றது. அத்தோடு
கோடிக்கணக்கான ஜீவராசிகள் இப்பூமியில் வாழ்கின்றன. இன்னும்
எண்ணிலடங்காத தாவர வகைகளும் புற்பூண்டுகளும் காணப்படுகின்றன.
இவை அனைத்துமே இந்த அற்புத அருளான நீரைப் பயன்படுத்தியே உயிர்
வாழ்கின்றன. நீர் இல்லாவிடின் இப்புவியில்
உயிர் வாழ்க்கையே சாத்தியமற்றுப் போகும். எமது பூமிப்பந்தின்
மேற்பரப்பு 71 வீத நீரால் நிரம்பப்பட்டுள்ளது. மீதமுள்ள 29 வீதம்தான் நிலம். நீரின்
பயன்பாடு அனைத்து ஜீவராசிகளுக்கும் மிக அவசியம் எனக் கருதித்தான் இறைவன் இத்தகைய
அதி கூடிய வீதாசாரத்தில் நீரை எமக்கு அளித்துள்ளான் போலும்.
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...