"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

26 June 2011

உழைப்பில் நம்பிக்கை வை...

சில சிறுவர்கள் தமது சொந்த செவுக்காக தெருவோரமாய் பிளாட்போமில் அமர்ந்துகொண்டு, போகிற வருகிறவர்களது காளணிகளுக்கெல்லாம் போலிச் போட்டு காசு சேர்த்துக்கொண்டிருந்தார்கள். பாதைக்கு மறுபுறத்திலிருந்து தன் காரின் கண்ணாடியைப் பாதி கீழிறக்கி, அதனூடாகத் தண் நண்பர்களுக்கு, அச்சிறுவர்களைச் சுட்டிக்காட்டுகின்றார் ஒரு தனவந்தர். தனவந்தர் தனது நண்பர்களிடம் கூறினார்; “அவர்கள் எனது புதல்வர்கள். இன்று நான் செல்வந்தனாக இருக்கின்றேன். ஆனால் என்வாழ்க்கையும் அன்று இப்படித்தான் ஆரம்பமாகியது. உழைப்பில் நம்பிக்கை வைக்கும் எந்த ஏழையும் தோற்றுப் போவதில்லை என்பது என் அனுபவம். என் புதல்வர்களும் தங்கள் வாழ்வை ஏழைகளாகத் தொடங்கினால்தான் நியாயமாக இருக்கும்.” என்றார். இது வெறும் கற்பனைக் கதை என்று நினைத்துவிட வேண்டாம். இவ்வாறு கூறியவர்தான் “ஹென்றி போர்ட்”

ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

25 June 2011

கூகில் ட்ரான்ஸ்லேட்டர் தமிழிழும்...

அனைவருமே அறிந்த விடயம்தான் கூகில் ட்ரான்ஸ்லேட்;டர். குறிப்பிட்ட சில மொழிகளிலிருந்து இன்னும் சில மொழிகளுக்கு எமக்குத்தேவையான சொல்லின் விளக்கத்தை மாற்றிப் பெற்றுக்கொள்வதற்காக அமைக்கப்பட்டுள்ள ஒரு இலகு வழிமுறைதான் இது. தற்போது கூகில் நிறுவனம் வாரி வழங்கும் பல்வேறு சேவைகளில் இதுவும் ஒன்று.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
அனைவருமே அறிந்த விடயம்தான் கூகில் ட்ரான்ஸ்லேட்;டர். குறிப்பிட்ட சில மொழிகளிலிருந்து இன்னும் சில மொழிகளுக்கு எமக்குத்தேவையான சொல்லின் விளக்கத்தை மாற்றிப் பெற்றுக்கொள்வதற்காக அமைக்கப்பட்டுள்ள ஒரு இலகு வழிமுறைதான் இது. தற்போது கூகில் நிறுவனம் வாரி வழங்கும் பல்வேறு சேவைகளில் இதுவும் ஒன்று.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

24 June 2011

இமாம் நாஸிருத்தீன் அல்பானி (வாழ்க்கைக் குறிப்பு)

சமகால இஸ்லாமிய அறிஞர்கள் அனைவராலும் அறியப்படக்கூடிய, பிரபல்யமான, தலைசிறந்த ஒரு அறிஞர்தான் அஷ்ஷெய்க் முஹம்மத் நாஸிருத்தீன் அல்பானி அவர்கள். இவர் ஹிஜ்ரி 1332 (1914)ல் பிறந்தார். அல்பேனியாவின் தலைநகரமான அஷ்கொடராவில் எளிமையானதொரு குடும்பத்தில் பிறந்தார். நாஸிருத்தீன் அல்பானி அவர்களின் தந்தை நூஹ் நஜ்ஜாதி அல்அல்பானி, கொன்ஸ்தாந்துநோபிள் என அழைக்கப்பட்ட இஸ்தான்பூலிலே மார்க்கக் கல்வியைப் பூர்த்திசெய்துவிட்டு அல்பேனியாவிலே சிறந்த மார்க்க அறிஞர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். இறை மறுப்புக்கொள்கையான நாத்திகம் அல்பேனியாவில் தடம் பதித்தபோது வெறுப்படைந்த நூஹ் நஜ்ஜாதி அவர்கள் குடும்ப சகிதம் சிரியாவின் தலைநகரான டமஸ்கஸிற்கு இடம்பெயர்ந்தார்.

22 June 2011

பொய்யுரைத்துத் தவறிழைக்கும் (முன்நெற்றி) நாஸியா

நாஸியா வழங்கும் தீர்மானங்களை வைத்தே உடல் அவயவங்கள் கருமமாற்றுகின்றன. இதுதொடர்பாக Essentials of anatomy and physiology என்ற கற்கை பின்வருமாறு விளக்குகின்றது. “தூண்டுதல், திட்டமிடுதல் மற்றும் ஒரு விடயத்தை ஆரம்பித்துவைத்தல் போன்ற செயற்பாடுகளை முன்நெற்றியே செய்கின்றதுஎன்கின்றது. எனவேதான் அமெரிக்கா போன்ற நாடுகளில் தொடர்ந்தும் பெரிய பெரிய குற்றங்களைச் செய்துகொண்டிருக்கும் குற்றவாளிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் போகும் சந்தர்ப்பத்தில் அவர்களது மூளையின் முன்பகுதியில் உள்ள நாஸியாவை சத்திர சிகிச்சை மூலம் துண்டித்து அகற்றிவிடுகின்றனர். இதனால் அக்குற்றவாளி சுயமாகத் தீர்மானம் எடுத்து எதனையும் செய்யும் சக்தியிழந்து சொல்வதை மாத்திரம் செய்யும் ஒரு ரோபோ போன்று ஆகிவிடுகின்றான்.

டொனி பிளேயர் அல்குர்ஆனைக் கற்கின்றார்.

பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டொனி பிளேயர் தான் தினமும் அல்குர்ஆனைக் கற்று வருவதாக பிரித்தானியாவின் “The Observer” என்ற சஞ்சிகைக்குக் கொடுத்த பேட்டியொன்றில் இவ்வாறு தெரிவித்துள்ளார். உலக நிகழ்வுகளைப் புரிந்துகொள்வதற்காக மாத்திரமல்லாமல் அது ஒரு மகிப் பெரிய வழிகாட்டி நூல் என்ற வகையிலும் நான் அதனைப் படித்துவருகின்றேன் என்று அவர் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கு நாடுகளுக்கான பிரிட்டனின் தூதுவராகக் கடமையாற்றும் பிளேயர் அப்பகுதி மக்களின் மத நம்பிக்கைகள் தொடர்பாக பலதையும் அறிந்திருப்பது தனது பணிக்குப் பெரிதும் உறுதுணையாக இருக்கும் என தான் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
டொனி பிளேயரின் மனைவியின் சகோதரியும் பிரபல ஊடகவியலாளருமான லோரன் பூத் கடந்த வருடம் இஸ்லாத்தைத் தழுவியமையும் இங்கு அவசியம் குறிப்பிடத்தக்கதாகும்.
  டொனி பிளயர்
லோரன் பூத்

Related Posts Plugin for WordPress, Blogger...