உலகின் மிகவும் தாழ்வான நிலப்பரப்பும் இதுதான்.
கடல் மட்டத்திலிருந்து -395
மீட்டர் (1295 அடி) பள்ளத்தில் இக்கடலும் அது சார்ந்த பிரதேசங்களும் அமைந்துள்ளன. இவ்விடத்தில்
அல்குர்ஆனின் ஒரு வரலாற்று அற்புதத்தை ஞாபகப்படுத்தியாகவேண்டும். உலகிலேயே மிகவும் தாழ்வான பகுதி சாக்கடல்
பகுதிதான் என்பது நவீன தொழில்நுட்பக் கருவிகள், அளவை முறைகள்,
புவியியல் ஆய்வு முறைகள் என்பவற்றின் துணையுடன்தான் அண்மைக்காலங்களில்
கண்டறியப்பட்டது. ஆனால் இத்தகைய தொழிநுட்ப, அளவையியல் முறைமைகள் இல்லாத அன்றைய காலத்தில் அல்குர்ஆன் இதனைத் துள்ளியமாக்க்
கூறியிருப்பது அல்குர்ஆன் ஓர் இறைவேதம் என்பதற்கு சான்றாகும். சூரா அர்ரூமில் மூன்றாவது வசனத்தில் “அத்னல் அர்ழ்
– தாழ்வான பூமி” என்ற பிரயோகத்தின் மூலம் இதனை
அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான்.
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...