இறந்த பிணங்களில் ஈக்கள் வந்து மூடுவதை நாம் கண்டிருப்போம். ஒருவர் மரணித்து ஒரு மணி நேரம் கழிந்ததிலிருந்து அச்சடலத்தின் மேல் ஈக்கள் முட்டையிட ஆரம்பிக்கின்றன. அனேகமாக அவை வாய், மூக்குத் துவாரம், கண்கள் திறந்திருப்பின் அதில், அக்குள் போன்ற இடங்களில் முட்டைகளை இடுகின்றன. 24 மணிநேரங்களில் முட்டைகள் பொரிக்கப்படும். முட்டையிலிருந்து குடம்பிப் புழுக்கள் வெளிவருகின்றன. பின்னர் அவை அரை அங்குல நீளப் புழுக்களாக வளர்கின்றன. அதே நிலையில் இருந்துகொண்டு தொடர்ந்து 12 நாட்களுக்கு அவை சடலத்தை உண்ணுகின்றன. அதன் பின் அப்புழுக்கள் ஈக்களாக வளர்கின்றன. வளர்ச்சியடைந்த அதே ஈக்கள் மீண்டும் அச்சடலத்தின் மீது முட்டையிடுகின்றன. இவ்வாறு ஒரு சடலத்தைச் சுற்றியே ஆயிரக்கணக்கான ஈக்களின் வாழ்க்கை வட்டம் ஆரம்பிக்கின்றன.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...