நாம் ஒரு விடயத்தை
உண்மைப் படுத்துவதற்காக அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறுவோம். அவ்வாறு அல்லாஹ்
ஒரு விடயத்தின் முக்கியத்துவத்தைக் குறிப்பிடுவானென்றால் அதன் மீது சத்தியம் செய்வான்.
இரவு, பகல், சூரியன், சந்திரன், வானம், பூமி, மலைகள் என்று பலவற்றின்
மீதும் சத்தியம் செய்துள்ளான். அதேபோன்றுதான் அல்குர்ஆனில் 95 ஆம் அத்தியாயம் 1 ஆம் வசனத்தில் வத்Zஸைதூன் என ஸைதூனின்
மீது சத்தியமிட்டுள்ளான். மற்றுமொரு இடத்தில் அது பரகத் நிறைந்த்து என்றும் கூறுகின்றான்.
முஸ்லிம்கள் எம்மைப்போன்று யூத, கிறிஸ்தவர்களும் இதனை கண்ணியமான, புன்னியமான ஒன்றாகப்
பார்க்கின்றனர். அப்படி என்னதான் அதில் முக்கியத்துவம் இருக்கின்றது என்று பார்ப்போம்.
20 August 2019
07 July 2019
யார் அழுவார் நீ உயிர் துறக்கையிலே?
"நீ அழுத வண்ணம் பிறந்த போது உன் வரவால் உலகம் மகிழ்ச்சியில் சிரித்துக் கொண்டு உன்னை வரவேற்றது, பிரிவின் போது துயரில் உலகம் அழுது கொண்டிருக்க நீ சிரித்துக் கொண்டே விடை பெற வேண்டும். மாறாக...நீ அழுது கொண்டே விடைபெற உலகம் சிரித்துக் கொண்டிருக்கும் நிலை வரக் கூடாது."
இமாம் ஷாஃபி (ரஹ்)
உங்கள் கருத்து:
Labels:
சிந்தனைக்கு
31 May 2019
பாரம் சுமக்கும் கழுதைகள்
“கழுதை, Donkey, பூBருவா” என்று எந்தப் பாசையில் சொன்னாலும் யாரையாவது திட்டுவதுபோன்றுதான் தோன்றும். ஏனெனில்
இன்றளவில் அந்தச் சொல் கழுதைகளுக்குப் பயன்படுவதைவிட
மனிதர்களுக்குத்தான் அதிகளவில் பயன்படுகின்றது. கழுதைகள் உண்மையிலேயே தோற்றத்திலும்
குணவியல்புகளிலும் விசித்திரமான விலங்குதான். இத்தொடரில் கழுதைகளின் சுவாரஷ்யமான சில
பக்கங்களைப் புரட்டிப் பார்ப்போம்.
அஷ்.எம்.என்.ஆலிப் அலி (இஸ்லாஹி) B.A
உங்கள் கருத்து:
Labels:
ISLAM - Science,
ஆய்வு,
படைப்பினங்கள்
15 May 2019
மைனா பேசும் பறவை
நாமனைவரும் அறிந்த
எமக்குப் பழக்கமான பறவைதான் மைனா. எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் மைனாக்களின் சப்தங்களைக்
கேட்கலாம். அவ்வளவு பிரபலமானவை. இவை ஸ்டார்லிங்
எனும் பறவைக் குடும்பத்தைச் சேர்ந்தவை. கிழக்காசிய நாடுகள்தான் அதுவும் இந்தியா, இலங்கை நாடுகள்தான் இவற்றின் தாய் பூமி. ஒரு காலத்தில் இங்கிருந்து
அமெரிக்க நாடுகளுக்கும் அவுஸ்ரேலியாவுக்கும் ஏற்றுமதிசெய்யப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டன.
தமிழ், சிங்களம், ஆங்கிளம், மலயாளம், ஹிந்தி போன்ற அனைத்து
மொழிகளிலும் இது மைனா –
Myna என்றே அழைக்கப்படுகின்றது. இதன் சரியான தமிழ்ப் பெயர் நாகணவாய்ப்புள் என்பதாகும்.
இலக்கியங்களில் ‘ சிறுபூவாய் ‘ என அழைக்கப்படுகிறது.
சிறுவர் இலக்கியப் பாடல்களிலும் காதல் பாடல்களிலும் கூட மைனாக்கள் இடம்பிடித்திருப்பது
இவற்றின் முக்கியத்துவத்தைக் காட்டுகின்றன.
உங்கள் கருத்து:
Labels:
படைப்பினங்கள்,
பறவைகள்
18 February 2019
சங்கதி சொல்லும் சங்கு
அறிமுகம்.
சங்கு
என்பது நடுத்தர அளவிலிருந்து பெரிய அளவு வரை வித்தியாசமான அளவுகளிலும்
வடிவங்களிலும் நிறங்களிலும் காணப்படுகின்ற நத்தை ஓடுகளுக்கு வழங்கப்படுகின்ற பொதுப் பெயராகும். சிரிய அளவுள்ள ஓடுகளுக்கு
சிப்பி என்றும் அதனை விடப் பெரிய நடுத்தர அளவில் உள்ளவை சங்கு என்று
அழைக்கப்படுகின்றன. ஆங்கிலத்தில் இவை Conch (கொன்ச்) எனப்படுகின்றன. சங்கு என்ற
இப்பெயர் தனியாக ஓட்டுக்கும் அல்லது ஓட்டுடன் கூடிய நத்தைக்கும்
வழங்கப்படுகின்றது.
இவை கடல்வாழ் குடற்காலி மெல்லுடலிகள் (Gastropoda) குடும்பத்தைச் சேர்ந்தவை.
உங்கள் கருத்து:
Labels:
படைப்பினங்கள்
Subscribe to:
Posts (Atom)







