"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

28 February 2012

BIGGEST, LONGEST, LARGEST

ஈமெயிலில் கிடைத்த சில அருமையான படங்கள்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

ஈமெயிலில் கிடைத்த சில அருமையான படங்கள்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

27 February 2012

ஜோர்ஜ் புஷ்சைக் கைதுசெய்யுமாறு சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை.

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி புஷ் தான் பதவியிலிருந்த காலத்தில் ஈராக் மீத நடாத்தப்பட்ட ஆக்கிரமிப்பு யுத்தத்தில் தடைசெய்யப்ட்ட ஆயுதங்களை உபயோகித்து இலட்சக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்றொழித்தமையால் அவர் ஒரு போர்க் குற்றவாளியென்றும் சட்டத்தின் முன் தண்டிக்கப்படல் வேண்டுமென்றும் சர்வதேச மன்னிப்புச் சபை அறிவித்துள்ளது. சர்வதேச மன்னிப்புச் சபையின் சட்டவல்லுனரும் ஆலோசருமான மாட்போல்ட் கூறுகையில் ”மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டோருக்கு அடைக்கலம் கொடுப்பதை சர்வதேச சட்டம் எதிர்க்கின்றது” என்றார். எனவே தன்சானியா, எதியோப்பியா, ஸாம்பியா போன்ற நாடுகளில் சுற்றுப் பிரயாணம் மேற்கொள்ளும்போது அவரைக் கைது செய்யுமாறு சர்வதேச மன்னிப்புச் சபை சம்பந்தப்பட்ட நாடுகளைக் கேட்டுக்கொண்டுள்ளது.

24 February 2012

போலித் திருமணம் நடாத்திய மதப்போதகர் கைது

பிரித்தானியாவில் சட்ட விரோதமாகக் குடியேறியவர்கள் பிரஜா உரிமையைப் பெறுவதற்காக 250 இற்கும் மேற்பட்ட போலித் திருமணங்களைச் செய்துவைத்து 30,000 ஸ்ரேலிங் பவுன்களை வருமானமாகப் பெற்ற பிரையன் ஷிப்சைட் என்ற மதகுரு பொலிஸாரினால் பிடிபட்டு 14 வருட சிறைதண்டனையை எதிர்கொண்டுள்ளார். மேற்படி திருமணங்கள் கிழக்கு லண்டனில் பொரஸ்கேட்டிலுள்ள செயின்ட்ஸ் தேவாலயத்தில் நடாத்திவைக்கப்பட்டுள்ளது. ஒரு போலித் திருமணத்திற்காக 140 ஸ்ரேலிங் பவுன் விகிதம் பெற்றுக்கொள்ளும் இவர் 1971 முதல் இக்குற்றத்தைப் புரிந்துவருவதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் மத போதகர்கள்

ஆயிரக்கணக்காண ஹோலண்ட் சிறுவர்கள் 6 தசாப்தங்களாகத் தொடர்ந்தும் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டு வருவதாக சவுதி அரேபியாவின் ஸபக் என்ற இணையம் BBC யைத் தொட்டும் செய்திவெளியிட்டுள்ளது. இக்குற்றத்தில் 800 கத்தோலிக்க மதப் போதகர்கள் தொடர்புபட்டிருப்பதாகவும் அச்செய்தி குறிப்பிடுகிறது. இந்த இழி செயலை முடிவுக்குக் கொண்டுவருவதில் கத்தோலிக்கப் பொதுச்சபை தோல்வி கண்டுள்ளதாகவும் ஹோலண்டின் தனியார் நிறுவனமொன்று சுட்டியுள்ளது.

அதிகம் பரவும் மார்க்கம் இஸ்லாம். பாப்பரசர் அறிவுப்பு

உலகில் அதிகம் பரவும் மார்க்கம் இஸ்லாம் என பாப்பரசர் விடுத்த அறிக்கையை மேற்கோள்காட்டி வத்திக்கான் இணையதளம் செய்திவெளியிட்டுள்ளது. அதிகம் பரவிவரும் மார்க்கங்களில் இஸ்லாம் முன்னிலை வகிப்பதாகவும் கிரிஸ்தவ மதம நம்பிக்கையாளர்களைவிட மூன்று மில்லியன் அதிக எண்ணிக்கையுடையோராக முஸ்லிம்கள் உள்ளனர் என்றும் உலக சனத்தொகையில் நூற்றில் 17.5 விகிதத்தினர் கிரிஸ்தவர்களென்றால் அதில் 19 வீதமானோர் முஸ்லிம்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.வருடாந்தம் 40 ஆயிரம்பேர் இஸ்லாத்தில் இணைவதாகவும் கிறிஸ்தவ, யூத மற்றும் பிற மதத்தினர் இவ்வாண்டின் இறுதிப் பகுதியாகும்போது அதிகமாக இஸ்லாத்தில் இணையும் வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளார்.

Related Posts Plugin for WordPress, Blogger...