குறித்ததொரு கடையில் வாடிக்கையாளர்கள் வரிசையில் பொருட்களை வாங்குவதற்காக வரிசையில் வந்துகொண்டிருந்தனர். இடையே வந்த செல்வந்தர் ஒருவர் வரிசையை உடைத்துக்கொண்டு நுழைய முயன்றார். மற்றவர்கள் அதனைத் தடுத்ததும் ஆவேசமாக “நான் யார் தெரியுமா?” என்று அதட்டிக்கேட்டார். கடை ஊழியர் பணிவாய்ப் பேசி அவரை நகர்த்த முயன்றார். மீண்டும் “நான் யார் தெரியுமா?” என்று உறுமினார். மேலாளர் வந்து வரிசையில் வரப்பணித்தும் “நான் யார் தெரியுமா?” என்று திருப்பிக் கூற…
மேலாளர் அலுவலக ஒலிபெருக்கியில் அறிவித்தார். “தான் யார் என்பது தெரியாமல் ஒரு மனிதர் எதிரே வருபவர்களிடமெல்லாம் அதுபற்றிக் கேட்கின்றார். அறிந்தவர் யாராவது இருந்தால் அவலை அடையாளம் காண உதவுங்கள்” என்றார். உண்மையில் தன்னை மறப்பதே தலைக்கனத்தின் அடையாளமாகும்.
நன்றி : மீள்பார்வை.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
உங்கள் கருத்து:
விளையாட்டுத் தொலைபேசியில் ஒரு பெண் குழந்தை தன் தோழியுடன் கற்பனையில் பேசிக் கொண்டிருந்தது. அப்போது மடியில் இருந்த பொம்மையைச் சுட்டிக்காட்டி “இவளை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்றே தெரியவில்லை? அடங்கவே மாட்டேன்குறாள், சமாளிக்கவே முடியவில்லை” என்கிறாள் குழந்தை. இதனை செவியுற்ற குழந்தையின் தாய் அதிர்ச்சியடைந்துவிட்டாள். தன் சிநேகிதியுடன் பேசிய விடயம் குழந்தையின் மனதில் இப்படியொரு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதை உணர்ந்துகொண்டாள். குழந்தைகள் பற்றிய நமது விமர்சனங்கள் அவர்களைச் சோர்வடையச் செய்கின்றன. குழந்தைகளோடு பேசும்போதும் அவர்களைப் பற்றிப் பிறரிடம் உரையாடும்போதும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.ஆலிப் அலி (இஸ்லாஹி)
உங்கள் கருத்து:
கணினிகளை ஊடுருவித் தாக்குதல் நடாத்தும் மேற்படி ஆயுதங்களை அல்லது வைரஸ்களை வடிவமைப்பவர்களைப் பொதுவாக “ஹெகர்ஸ் (Hackers) துருவிகள்” என அழைத்தாலும் அவர்களை இரண்டுவகையினாரப் பிரிக்க முடியும். அனுமதியின்றி சட்டவிரோதமாகக் கணினிகளை ஊடுருவி நாசகார வேலைகளைச் செய்வோர் கருப்புத் தொப்பிகள் (Black Hats) என அடையாளப்படுத்தப்படுகின்றனர். Crackers என்றும் இவர்கள் குறிப்பாக அழைக்கப்படுகின்றனர். கணினித் தொகுதிகளினுள் அனுமதியுடன் உட்பிரவேசித்து அவற்றிலுள்ள ஓட்டை உடைசல்களை, பிழைகளை இனங்கண்டு அவற்றின் பாதுகாப்பற்ற தன்மைகளை நீக்கி சரிசெய்பவர்கள் வெள்ளைத் தொப்பிகள் (white Hats) என்றும் அழைக்கப்படுகின்றனர். அவர்கள் சட்டபூர்வமான முறையில் அதில் ஈடுபடுவதனால் இவர்களை Ethical Hackers என்றும் அழைக்கப்படுகின்றனர்,
ஆலிப் அலி (இஸ்லாஹி)
குறிப்பு : “எங்கள் தேசம் பத்திரிகையில் பிரசுரமான ஆக்கம்”
உங்கள் கருத்து:
இந்த இருபத்தியோராம் நூற்றண்டின் மாபெரும் தீர்மாணிக்கும் சக்தியாக (Decisive Factor) காணப்படுவது தொலைத்தொடர்பு ஊடகங்களாகும். 19ம் நூற்றாண்டில் எழுச்சியுறத் துவங்கிய அதிவேக தொலைத்தொடர்பு ஊடகங்களின் செயற்பாடுகள் 21ம் நூற்றாண்டில் பாரிய வீச்சுடன் முன்னேரிவருகின்றன. இம்முன்னேற்றத்திற்கு வித்திட்ட முக்கிய விடயம் தகவல் புரட்சியும் மனிதனின் பொழுதுபோக்கும் சிந்தனையுமாகும். எனவேதான் இது தகவல் வெள்ளம் பிரவாகிக்கும் ஒரு யுகம் - Era of information flood – என வர்ணிக்கப்படுகின்றது. பெஞ்சமின் பார்பர் எனும் சமூகவியலாளர் இந்நவீன தொலைத்தொடர்பூடகத்தினை “இன்போடைன்மன்ட் - Infomation + Entertainment = Infortainment – தகவல் மற்றும் பொழுதுபோக்குத் தொடர்பூடகம் என அழைக்கின்றார்.
ஆலிப் அலி (இஸ்லாஹியாஹ்)
உங்கள் கருத்து: