“பிள்ளையைப் பெத்தா கண்ணீரு; தென்னையைப் பெத்தா இளநீரு” இப்படி ஒரு பாடல் வரி
உண்டு. “ஒன்ன வளக்குறத இரண்டு தென்னை மரத்த வளர்த்திருக்கலாம்! “பிள்ளைகளைப் பெற்று
அவர்களால் மனம் வருந்திக்கொண்டிருக்கும் பெற்றோர் இப்படியான வார்த்தைகளைக் கூறுவதை
முன் சென்ற பரம்பரையினரிடம் அடிக்கடி கேட்க முடியும். இதில் தென்னையை உதாரணமாகக் கூறியிருப்பது
தென்னையின் மகிமையும் அதன் பயன்பாடுகளும் மனிதனைவிட அதிகமாக இருக்கின்றது என்பதனால்தான்.
இத்தொடரில் தென்னையின் அற்புதப் பயன்கள் பற்றி அறிந்துகொள்வோம்.
அஷ்.ஆலிப் அலி (இஸ்லாஹி)
உங்கள் கருத்து:
அறிமுகம்.
நீங்கள் இங்கு படத்தில் காண்பது ஆங்கிலத்தில் இகுவானா (Iguana) எனவும் தமிழில் பேரோந்தி எனவும் அறியப்படும் ஒருவகைப் பல்லி இனத்தைத்தான். இது உலகில் வாழும் மிக அறிய மற்றும் அற்புதமான உயிரினங்களில் ஒன்று. இந்த இகுவானாக்கள் தற்போது மத்திய மற்றும் தென் அமெரிக்கா, மெக்ஸிகோ, கலாபிகஸ் தீவுகள், கரிபியன் தீவுகள், பிஜி மற்றும் மடகஸ்கார் ஆகிய பகுதிகளில் பரவலாக வாழ்கின்றன. பிறந்ததிலிருந்து பல அபாயகரமான கட்டங்களைக் கடந்து, தமது உயிரைத் தக்கவைத்துக்கொள்வதற்காக பல்வேறு போராட்டங்களை நடாத்தி உயிர் தப்பி வாழும் ஆச்சரியமான வாழ்க்கைப் பாடத்தை இவை நமக்கு சொல்லித்தருகின்ன. இவற்றிலிருந்தும் பாடம் கற்போம் வாருங்கள்.
அஷ்.ஆலிப் அலி (இஸ்லாஹி)
உங்கள் கருத்து:
பேராதனை தாவரவியற் பூங்காவிற்குச் சென்றால் தவறாமல் ஒரு முறை மூங்கில் மரங்கள் நிறைந்திருக்கும் பகுதிக்குச் சென்று வாருங்கள். வகை வகையான மூங்கில் மரங்களைக் கண்டுகொள்ளலாம். பச்சை மூங்கில், மஞ்சள் மூங்கில், கருப்பு மூங்கில், சிவப்பு மூங்கில் என ஏராளமான, அளவிலும் தோற்றத்திலும் வித்தியாசமான பல மூங்கில் மரங்களைக் கண்டுகொள்ளலாம். அந்த இடம் கூட பார்ப்பதற்கு அழகாகவும் ரம்யமாகவும் இருக்கும். பூங்காவுக்கு பூக்களை மட்டுமே பார்க்கச் செல்லும் பலரும் மூங்கில் மரத்தில் என்னதான் இருக்கின்றது பார்ப்பதற்கு? என்று அலட்சியத்துடன் அதன் அழகை ரசிக்கும் சந்தர்ப்பத்தைத் தவறவிடுகின்றனர். பார்ப்பதற்கு மட்டுமல்ல, படிப்பதற்கும் மூங்கில் மரத்தில் பல விடயங்கள் இருக்கின்றன. படிப்போமா…
அஷ். எம்.என்.ஆலிப் அலி (இஸ்லாஹி) B.A.
Dip. In psychological Counseling, Al-Quran & Science Researcher.
உங்கள் கருத்து:
சிங்கம் காடிட்டின் அரசனாக மதிக்கப்பட்டாலும் பல சந்தர்ப்பங்களில் வீரத்திற்கு புலிதான் உவமிக்கப்படுகின்றது. சிங்கத்திற்கு இணையாக காட்டுக்குள் திமிரோடு திரியும் அடுத்த விலங்கு புலிதான். சிங்கத்தைவிடவும் உடலமைப்பில் புலி பெரியது. சிங்கத்திற்கும் புலிக்கும் இடையில் நடைபெற்றுள்ள சண்டைகளிலெல்லாம் புலிதான் வெற்றி பெற்றுள்ளது. உணவுச்சங்கிலியின் முக்கிய இனம். இத்தொடரில் புலிகளின் வீர தீரமான வாழ்க்கை பற்றிப் பார்ப்போம்.
அஷ்.எம்.என்.ஆலிப் அலி
(இஸ்லாஹி) B.A
Dip. In psychological Counseling, Al-Quran
& Science Researcher.
உங்கள் கருத்து:
காலை ஆறு மணி இருக்கும்.
ஜன்னல் வழியாக “டொக்… டொக்…” என்று ஒரு சப்தம்.
யார் ஜன்னலை விடாமல் தட்டிக்கொண்டிருப்பது? என்று சற்று கோபத்தோடு எட்டிப் பார்த்தேன். சின்னஞ் சிறிய ஹம்மிங்
பேர்ட் ஒன்று அதன் விம்பம் கண்ணாடியில் இருப்பதைக கண்டு ஏமார்ந்து தன் அலகினால் தட்டி
விளையாடிக்கொண்டிருந்தது. அந்த ஹம்மிங் பேர்ட் தான் இக்கட்டுரையை எழுதத் தூண்டியது.
அஷ்.எம்.என்.ஆலிப்
அலி (இஸ்லாஹி) B.A
Dip. In psychological Counseling
Al-Quran & Science Researcher
உங்கள் கருத்து: