அண்மையில் எனது நண்பர் ஒருவரின் வீட்டுக்குச் சென்றிருந்தேன். வரவேற்பறையில் அமர்ந்திருக்கும்போது இரண்டு சிட்டுக் குருவிகள் உள்ளே வருவதும், வெளியே செல்வதும் அங்கும் இங்கும் பறப்பதுமாக இருந்தன. அவரிடம் கேட்ட போது நீண்ட நாட்களாக இவை இங்கு இருப்பதாகவும் அங்கே சுவரில் பொறுத்தப்பட்டிருந்த மின் விளக்கில் அவை கூடுகட்டியிருப்பதாகவும் கூறினார். முன்பெல்லாம் சர்வ சாதாரணமாகக் காணக் கிடைக்கும் சிட்டுக் குருவிகளை இப்போது அரிதாகவே காண முடிகிறது. சிட்டுக் குருவிகளின் தலைமறைவுக்குப் பின்னால் ஆச்சரியமான பல விடயங்கள் இருக்கின்றன. எனவே அவை பற்றியும் சிட்டுக் குருவிகளின் வாழ்க்கை முறை பற்றியும் இத்தொடரில் உங்களுடன் பகிர்ந்துகொள்ள நினைக்கிறேன். இதோ…
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...