இப்படத்தில் நீங்கள் காண்பதுபோன்று 'வாள் முனையில் பரப்பப்பட்ட மார்க்கம்தான் இஸ்லாம்" என்று இஸ்லாம் குறித்த சரியான வரலாற்று நோக்கை அறியாதோரும் மற்றும் இஸ்லாத்தின் மீது துவேச உணர்வுகளை வெளிப்படுத்துவோரும் தவறான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். இஸ்லாத்தைப் பற்றி தவறான கருத்துக்களைப் பிரச்சாரம் செய்யவென்றே இயங்கும் ஒரு அமைப்புதான் மேலுள்ள படத்தில் காண்கிறீர்கள். உண்மையிலேயே இது மடமைத்தனமானதொரு குற்றச்சாட்டு என்பதை பக்கசார்பின்றி நோக்கும் முஸ்லிமல்லாதோரின் கருத்துக்களிலிருந்து விளங்கலாம்.