நோன்பு திறப்பதை பேரீத்தம்
பழம் கொண்டு ஆரம்பிப்பது நபியவர்களது ஒரு சுன்னாவாகும். நபியவர்கள்
கூறினார்கள். “ஒருவர் நோன்பு திறந்தால் பேரீத்தம் பழம் கொண்டு நோன்பு
திறக்கட்டும். ஏனெனில் அது பாக்கியமுடையது. அல்லது தண்ணீரைக் கொண்டு நோன்பு
திறக்கட்டும். அது அனைத்தையும் சுத்தப்படுத்தக்கூடியது.” என நபி
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் கூறியுள்ளார்கள். (முஸ்லிம்) உண்மையில்
நோன்பு திறக்கும்போது பேரீத்தம் பழத்தையும் சேர்த்துக்கொள்வதால் அது மனித
உடலுக்குப் பல்வேறு அனுகூலங்களை அளிக்கின்றது.
29 June 2014
11 June 2014
ஒரு துண்டு நாவில் இத்துனை அற்புதங்களா?
கற்குகைக்குள் பதுங்கியிருந்துகொண்டு இறைகளைத் தாக்கும்
விலங்கு போன்று பற்குகைக்குள் பதுங்கிக் கிடந்து பல்வேறு செயல்களைப் புரியும் நாவின் சில அற்புதத் தன்மைகளைப்
பற்றி இத்தொடரில் நோக்குவோம். எமது நாக்கு இளஞ்சிவப்பு நிறத்தினாலான எழும்புகளற்ற ஒரு தசையாகும். அத்தோடு உடலில் உள்ள வலிமையான தசைகளில் நாக்கும் ஒன்று. நாவின் வெளியே தெரியும் பகுதி அகலம் குறைந்த்தாகவும் மெல்லியதாகவும்
நாவின் உற்பகுதி அகலமாகவும் தடிப்பாகவும் காணப்படுகின்றது. எழும்பில்லாத தசைத் துண்டு
என்பதால் எப்படி வேண்டுமானாலும் வளைந்து, நெழியும் தன்மையைக்
கொண்டுள்ளது. அத்தோடு நாக்கின் நுணிப் பகுதி உடம்பிலேயே
தொடுகை உணர்ச்சி கூடிய பகுதியாகும். வாயில் ஊறும் உமிழ் நீர் நாவை எப்போதும் ஈரமாக வைத்திருக்கின்றது.
உங்கள் கருத்து:
Labels:
ISLAM - Science,
படைப்பினங்கள்
12 May 2014
நம்பிக்கை நட்சத்திரம் நாய்
நாய்கள் ஓநாய் வர்க்கத்தை சேர்ந்தவையாகும். தோற்றத்தில் இவை ஓநாய்களை ஒத்திருந்தாலும்
குணப் பண்புகளில் ஓநாய்களை விடவும் நாய்கள் சாதுவானவையும், மனிதனுடன்
இலகுவில் பலக்க்கூடியவையுமாகும். பொதுவாக விலங்குகளில் ஒரு இனத்தில்
குறைந்த அளவிலான வகைகளே காணப்படும். ஆனால் நாய் இனத்தில் அளவிட
முடியாத அளவு பல்வேறு வகைகள் காணப்படுகின்றன. பொதுவாக இவை அனைத்தும்
வீட்டு நாய்கள், காவல் நாய்கள், வேட்டை
நாய்கள், காட்டு நாய்கள், சவாரி நாய்கள்
என பரித்தறியப்படுகின்றன. நாய்க்குத் தமிழில் ஞாளி, எகினம், அக்கன், அசுழம், குக்கர், கூரன், கொக்கு, ஞமலி, ஞெள்ளை, முலவை, முவ்வை, குக்குரன், கடுவாய், வடி, வங்கு, நயக்கன், பாகி, பாசி, முடுவல் என்றெல்லாம்
பெயர்கள் உண்டு.
உங்கள் கருத்து:
Labels:
படைப்பினங்கள்
25 April 2014
காதைப் பிளக்கும் இடியும், கண்னைப் பறிக்கும் ஒளியும்
“சோ” என்று சுழன்றடிக்கும் காற்றுடன், பேயாகப் பெய்யும் மழையுடன், இடியும் மின்னலும் சேர்ந்து அடிக்கும்போது எம்மைப் பீடிக்கும் அச்சத்தில் இரத்தம் உறைந்துபோகும். அப்போதுதான் அல்லாஹ்வையும் ஞாபகிப்போம். தெரியாத துஆக்களெல்லாம் வாயில் வரும். இந்த அனுபவம் எமக்கும் நிகழ்ந்திருக்கும். அல்லாஹ் பின்வரும் திருமறை வசனத்தில் இந்நிலையை நிராகரிப்பாளர்களுக்கு ஓர் உதாரணமாகச் சொல்கின்றான். ”(ஓர் உதாரணம்;) காரிருளும், இடியும், மின்னலும் கொண்டு வானத்திலிருந்து கடும் மழை கொட்டும் மேகம்; (இதிலகப்பட்டுக்கொண்டோர்) மரணத்திற்கு அஞ்சி இடியோசையினால், தங்கள் விரல்களைத் தம் காதுகளில் வைத்து (அடைத்துக்) கொள்கிறார்கள்; ஆனால் அல்லாஹ் (எப்போதும் இந்த) காஃபிர்களைச் சூழ்ந்தனாகவே இருக்கின்றான்.” (2:19)
உங்கள் கருத்து:
Labels:
ISLAM - Science,
படைப்பினங்கள்
22 April 2014
ஒளியினால் படைக்க்பட்ட மலக்குகள்
இப்பிரபஞ்சத்தில்
இறைவனது படைப்புகளை இரண்டாக வகைப்படுத்த முடியும். ஒன்று சக்திகள் (Energies). அதில் மின் சக்தி, வெப்ப சக்தி, காந்த சக்தி, ஒளிச் சக்தி, இயக்க சக்தி… என்று பல உள்ளன. இவற்றை பௌதியவியலில் (Physics) உள்ளடக்குவர். இரண்டாவது சடம் (Matter) எனப்படுகின்றது. இதில் திண்மம், திரவம், வாயு என்பவற்றோடு இம்
மூன்றுக்கும் அப்பாட்பட்ட நான்காவது ஒரு பொருளும் உள்ளது. அது ப்ளாஸ்மா (Plasma) என
அழைக்கப்படுகின்றது. சக்தி மற்றும் சடம் ஆகிய
இரண்டாலுமான நாம் அறிந்த இறைவனின் மூன்று பெரும் படைப்புகள் இப்பிரபஞ்சத்தில்
உள்ளன. அவை ஒன்று ஒளியால் அல்லது கதிரால் (LIGHT/RAY) படைக்கப்பட்ட மலக்குகள் ஆகும்.
உங்கள் கருத்து:
Labels:
ISLAM - Science,
படைப்பினங்கள்
Subscribe to:
Posts (Atom)












