அன்பர்களே! நாம் தற்போது புனித ஷஃபான் மாதத்தை அடைந்திருக்கின்றோம். இஸ்லாத்தின் புனிதமான மாதங்களில் இதுவும் ஒன்று. நபி (ஸல்) அவர்களது வழிகாட்டுதல்களுக்கிணங்க நாம் இம்மாதத்தை நோன்பு பிடிப்பதில் சிறப்பாகப் பயன்படுத்த வேண்டும். பின்வரக்கூடிய ஹதீஸை சற்று அவதானியுங்கள்.
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் ரஸுல் (ஸல்) அவர்கள் ஷஃபானைவிட அதிகமாக வேறெந்த மாதத்திலும் நோன்பு நோற்கவில்லை. அவர்கள் ஷஃபான் முழுவதுமே நோன்பு நோற்பவராக இருந்தார்கள். மற்றுமோர் அறிவிப்பில் ஷஃபான் மாதத்தில் அதிகமான நாட்களில் நோன்பு நோற்பார்கள் என்றும் வந்துள்ளது. (புஹாரி, முஸ்லிம்)
எனவே நாம் அடுத்து வருகின்ற ரமழானிற்குத் தயாராகும் விதமாகவும் இம்மாதத்திலே அதிக நன்மைகளைப் பெற்றுக்கொள்ளும் விதத்தில் அதிகமதிகம் நோன்பு பிடிப்போம்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
உங்கள் கருத்து:
தேடலுக்கான தளம் என்றால், நம் நினைவில் முதலில் நிற்பது கூகுள் தேடுதளம் மட்டுமே. ஆனால் அறிவியல் தகவல்கள் தேடுவதற்கு மட்டும் என ஒரு தளம், கூகுள் தேடல் தளத்தைக் காட்டிலும் முன்னணி இடம் பெற்று இயங்குகிறது. இதன் பெயர் "சைரஸ் (Scirus). இதன் சிறப்பம்சங்கள் பலவற்றையும் ஏன் பிற தளங்களுக்கும் மேலாக இதனைப் பயன்படுத்த வேண்டும் என்பதற்கான காரணங்களையும் (http://www.scirus.com/srsapp/aboutus) என்ற இந்தப் பக்கத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். அவற்றில் முக்கியமான சிலதை மாத்திரம் இங்கு குறிப்பிடுகின்றேன். ஆலிப் அலி (இஸ்லாஹி)
உங்கள் கருத்து:
திருமணம் ஆயிரம் காலத்துப் பயிர் என்பார்கள். சிலர் திருமணம் முடிக்க பெண் பார்ப்பதையே ஒரு பொழுது போக்காய் எடுத்துக்கொண்டு ஊர் ஊராய்ச் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். அதிலும் வெள்ளைப் பொண் வேண்டும், சிவந்த பொண் வேண்டும், இவ்வளவு சீதனம் வேண்டும்... என்றெல்லாம் கண்டிஷன்ஸ் போட்டு போடு அட்டகாசத்துக்கு அளவே இல்ல. ஆனா இங்க இருக்கின்ற இரண்டு நெஞ்சங்களைப் பாருங்கள். எவ்வளவு அன்பும் காதலும் தன் மனைவியிடம் இருந்திருக்க வேண்டும். நல்ல ஆரோக்கியமாக இருக்கும் நிலையிலேயே கட்டின மனைவியிடம் ஆயிரம் குறைதேடும் கணவர்களே கொஞ்சம் இங்க பாருங்கள். உங்கள் கண்கள் பணிகின்றனவா?
ஆலிப் அலி (இஸ்லாஹி)
உங்கள் கருத்து:
“பூமியை நாம் உங்களுக்குத் தொட்டிலாக ஆக்கவில்லையா?” (78:6) என்ற அல்குர்ஆனிய வசனம் புவியில் உயிர்வாழ்க்கைக்காகக் காணப்படுகின்ற பல்வேறு சாத்தியப்பாடுகளையும் பட்டியலிட்டுக் கூறுகின்றது. தொட்டிலென்றால் அது எவ்வளவு சுகமானதும் பாதுகாப்பானதும் என்று நாம் அறிவோம். அதேபோன்றதுதான் இப்பூமியும் என்பதனையே அல்லாஹ் சூசகமாகக் கூறுகின்றான். ஞாயிற்றுத் தொகுதியில் காணப்படுகின்ற கோள்களிலேயே மிகவும் அழகான இப்பூமி பார்ப்பதற்கு நீல நிறத்தில் கோள வடிவத்தில் காட்சியளிக்கின்றது.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
குறிப்பு : அகரம் சஞ்சிகையில் பிரசுரமாகியது.
உங்கள் கருத்து:
ஒரு செல்வந்தரிடம் நீண்ட காலமாக வேலை பார்த்த உதவியாளரை அவர் அழைத்து “இதோ பார்! இந்த இடத்தில் ஒரு நல்ல வீட்டைக் கட்டவேண்டும். பணத்தைப் பற்றியெல்லாம் கவலைப் படாதே! அதன நான் பார்த்துக்கொள்கின்றேன். நல்ல சிமெண்ட், செங்கல், நல்ல இரும்பு, நல்ல மரம், என்று உன் மனம் விரும்பிய படி இந்த வீட்டைக் கட்டு. முதல்தரமாக இருக்கவேண்டும். கட்டி முடிந்தவுடன் சாவியுடன் என் வீட்டுக்கு வா” என்றார்.ஆலிப் அலி (இஸ்லாஹி)
உங்கள் கருத்து: