பஞ்ஜாப் பிரதேசத்திலிருந்து தனித்தனியாக ஓடிவரும் ஐந்து நதிகள் ஒன்று சேர்ந்தே சிந்துநதி எனப்பெயர் பெறுகின்றது. இதனையண்டித் தோற்றம்பெற்ற பெரும் நாகரிகம்தான் சிந்து நாகரிகம். அன்று சிந்து நாட்டின் பல்வேறு பகுதிகளையும் பல சிற்றரசர்கள் ஆண்டுவந்தனர். சிந்து மன்னனான உதயவீரன் அங்கு பெரும் கொடுங்கோலாட்சியையே புரிந்துவந்தான். அவனை அரேபியர் ‘தாஹிர்’ என்றழைத்தனர். அவனது ஆட்சிக்குட்பட்டு வாழ்ந்த மக்கள் மிருகங்கைளவிடவும் கேவலமாகவே நடாத்தப்பட்டனர். பல்வேறு இன்னல்களுக்கும் அட்டூளியங்களுக்கும் முகங்கொடுத்து வாழ்க்கைப்பட்டனர். இதனால் அவர்கள் தம்மன்னனின்மீது தீரா வெறுப்புக் கொண்டிருந்தனர்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இன்றைய இலத்திரனியல் உலகில் பல இலத்திரனியல் சாதனங்களைக் கையாள வேண்டிய அவசியப்பாட்டை எதிர்நோக்கியுள்ளோம். அதிலும் வளர்ந்துவரும் தகவல் புரட்சியின் வேகத்திற்கு எம்மையும் ஈடுசெய்துகொள்ள இச்சாதனங்களின் உபயோகம் தவிர்க்க முடியாததாக மாறியுள்ளது. அந்தவகையில் தொலைக்காட்சி, இணையம் என்பன உலக நடப்புகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள உதவும் பொருத்தமான ஊடகங்களாக விளங்குகின்றன. எனினும்,சமூகத்தில் பரவலாகக் காணப்படும் இச்சாதனங்களால் நாம் எதிர்நோக்கிவரும் புதுவகையானதொரு நோய்குறித்து ஆராய்வதே இந்தக்கட்டுரையின் நோக்கமாகும்.

ஒரு விடயத்தை ஆழமாக விளங்கி விசுவாசிக்கும்போதுதான் அதன் சுவையும் கனதியும் உள்ளத்தில் ஆழப்பதிகின்றது. அதுமட்டுமன்றி ஈமானும் பலம்பெறுகின்றது. ஆன்மா, ஆன்மிகம் சம்பந்தமாக பல மதங்களும் பேசியுள்ளன. ஆனால் இஸ்லாம் கூறும் ஆன்மாவின் உண்மைத் தன்மையோ அது மனிதனை இறைவனிடம் நெருங்கவைத்து மனிதப் படைப்பின் நோக்கத்தைப் புறியவைக்கின்றது. அந்தவகையில் மனித ஆன்மாவின் பயணத்தொடர் குறித்து இக்கட்டுரையில் சற்று விளங்க முயற்சிப்போம்.
இறைவனின் படைப்புகளிலே மிகவும் உயர்ந்த படைப்பு மனிதன்தான். காரணம் யாதெனில் எந்தவொரு படைப்புக்கும் வழங்கப்படாத ‘ஆன்மா’ என்ற ஒரு அம்ஷம் மனித உடலில் காணப்படுகின்றது. இவ்வான்மா பறவைகளுக்கோ மிருகங்களுக்கோ தாவரங்களுக்கோ எம் கண்களுக்குப் புலப்படாத நுண்உயிரிகளுக்கோ வழங்கப்படவில்லை. மனிதனுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

எம்மில் பலர் இவ்வுலக வாழ்க்கை நித்தியமற்றதென அறிந்திருந்தபோதிலும் ஷைதானுக்குக் கட்டுப்பட்டு மனோ இச்சைக்கு வலிப்பட்டு அதன்படி வாழ்ந்து மடிகின்றனர். இவ்வுலகில் உயர்ந்த அறிவார்ந்த படைப்பாகிய மனிதன் வெறும் உடலிச்சைகளையும் மனோ இச்சைகளையும் மாத்திரம் தீர்த்துக்கொண்டு அவன் படைக்கப்பட்டதன் உண்ணத நோக்கத்தை புரிந்துகொள்ளாமல் பொருளாதாரத்தை ஈட்டுவதில் மாத்திரம் குறியாய் வாழ்ந்து குறுகிய ஆயுளைச் செலவு செய்துவிட்டு இறந்துவிடுவதென்பது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாதவொன்று.
இவ்வுலகின் யதார்த்தம் யாதெனில் இது நிரந்தரமற்றது. அற்பமானது. இது இன்பமனுபவிப்பதற்கான இடமல்ல. இதுவொரு சோதனைக்களம். மனிதனின் நிரந்தரமான நித்திய வாழ்க்கை மறுமையில்தான் அமைகின்றது. இம்மை என்பது தற்காலிகத் தங்குமிடம் மாத்திரம்தான். இவ்வுலகம் பெறுமதியற்றது, கவர்ச்சிகரமிக்கது, வீணும் விளையாட்டும் நிரம்பியது. அல்லாஹ்விடத்திலும் நபிகளாரிடத்திலும் இவ்வுலக வாழ்க்கைக்கு எப்பெருமானமும் இருக்கவில்லை. அல்லாஹ் இதுபற்றி அல்-குர்ஆனில் இவ்வாறு கூறுகின்றான்.
பாகிஸ்தானைச் சேர்ந்த சகோதரி Dr.ஆஃபியா 2003 மார்ச் 30ல் பாகிஸ்தான் உளவுத்துரையினால் கைதுசெய்யப்பட்டு அமெரிக்க FBI இடம் விசாரனைக்காக ஒப்படைக்கப்பட்டார்.
“உஸாமாபின் லேடனின் தீவிரவாத அமைப்புக்கு நிதியுதவிகள் செய்துள்ளார்” என்ற போலிக் குற்றச்சாட்டுகளை அவர்மீது சுமத்தியே விசாரனையென்ற பெயரில் அவரைக் கைதுசெய்தனர். கைதுசெய்யப்பட்ட அவர் ஆப்கானிஸ்தான் பக்ரம் (Bagram) சிறையில் அடைக்கப்பட்டு வாய்விட்டுச் சொல்லமுடியாதளவு சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். சிறைக்காவலர்களால் மோசமான முறையில் பாலியல் சித்திரவதைகளுக்கும் ஆளாகியுள்ளார்.
இக்கொடுமையை 2008 ஜுலை 06ஆம் திகதி பிரபல முன்னால் பிரிட்டிஷ் பத்திரிகையாளர் இவோன் ரெட்லி அம்பலத்துக்குக் கொண்டுவந்துள்ளார். அவர் சகோதரி ஆபியாவின் விடுதலைக்கான நடவடிக்கைகளில் களமிறங்கி செயற்பட்டுவருகின்றார்.
நிவ்யோக் நீதிமன்றத்தில்; குற்றம் நிருபனமானால் அவருக்கு 20 ஆண்டுகள் கடூழியச்சிறைத்தண்டனை வழங்கப்படும். ஏற்கனவே அவர் பட்டிருக்கும் வேதனைகளோ சொல்லிற்கடங்காதவை. இந்நிலையில்……
உடன் பிறவா அச்சகோதரியை எமது பிரார்த்தனைகளில் சேர்த்துக்கொள்வோம். அவரது விடுதலைக்காய்ப் பிரார்த்தித்து அநீதிக்கெதிராகக் குறல்கொடுப்போம்.